எதிர்கால சிந்தனை சமுக மேம்பாட்டு அமையத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

 (ரமணன் - வாழைச்சேனை)
அந்தவகையில் புதுவருட நாளாகிய  9.30 மணியளவில் (01.01.2017) கும்புறுமூலை, வெம்பு பிரதேசத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய இனங்காணப்பட்ட மாணவர்களுக்கான புத்தகப் பை, அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், பாடசாலை பாதணிகள் போன்றனவும் வழங்கப்பட்டதோடு, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிக்குமான பரிசில்களும் வழங்கப்பட்டன.

வெம்பு கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிராம சேவகர் திரு. அரியக்குட்டி, பிரதேச சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து கதிரவெளி திலகவதியார் மகளீர் இல்லத்தின் பராமரிப்பில் உள்ள சிறார்களுக்கான மதிய போசனம் ஏற்பாடு செய்யப்பட்டதோடு அங்குள்ள 38 சிறார்களுக்குமான பாதணிகள், குடைகள் என்பனவும் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வுக்கான மதிய போசனம், சிறார்களுக்கான பாதணிகள் போன்றவை கண்ணகிபுரம் கிறவுண் விளையாட்டுக் களகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டதோடு, சிறார்களுக்கான குடைகளை வாழைச்சேனை துர்க்கை அம்மன் ஆலய நிருவாக சபையினர் வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  

  

  

  

  

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1742.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது

Read More