வாசம் உதவும் உறவுகள் அமைப்பினால் வீடுகள் கையளிப்பு!

 நிலமும் வீடும் இன்றி எத்தனையோ குடும்பங்கள் நமது நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலுங்கூட ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வீடின்றி குடிசைகளிலும் தகரக் கொட்டில்களிலும் குழந்தை குட்டிகளோடு பாதுகாப்பின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

வீடு இல்லாமையை அனுபவிப்பவர்களினால்த்தான் அதன் கொடுமையை விளங்கிக் கொள்ள முடியும். மழைக்காலமோ சரி வெய்யில்க்காலமோ சரி எல்லாக்காலங்களிலும் துன்பத்தை அனுபவிப்பவர்கள் அவர்கள். இத்தகைய நிலமையில் சிறுகுழந்தைகளையும் பிள்ளைகளையும் பாகாத்துப் பராமரிப்பதென்பது பெருந்துயரம்.

சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் இளைப்பாறுவதற்கும் தூங்குவதற்கும்; உறவினர்கள் நண்பர்களை ஆதரிப்பதற்கும் செய்யுந் தொழிலை நிம்மதியோடு மேற்கொள்வதற்கும் விஷேடமாக குழந்தைகள் சிறுவர்கள் பெண்களின் பாதுகாப்புக்கும்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு வீடு அவசியம்

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பலாச்சோலைக் கிராமத்தில் சொந்தத்தில் நிலமும் வீடும் இன்றி நீண்ட காலமாக அவதியுற்ற இரு குடும்பங்களான அ.பரமேஸ்வரன் மற்றும் சி.செல்வராணி ஆகியோரை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட மிக வறியகுடும்பங்களுக்கு குடியிருப்புக் காணிகளை வழங்கியதோடு மட்டக்களப்பில் செயற்பட்டுவரும் வாசம் உதவும் உறவுகள் அமைப்பினரிடம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க வாசம் உதவும் உறவுகள் அமைப்பினர் அவ்விரு குடும்பங்களுக்கும் இரு வீடுகளை அமைத்து உதவியுள்ளனர்.

இவ்வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் அமைப்பின் பொருளாளர் வி.ஜீவானந்தம் அமைப்பின் ஆலோசகரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் தலைவருமான த.வசந்தராஜா, பாலாச்சோலை கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் எஸ்.பாக்கியராஜா ஏறாவூர்ப்பற்று பிரதேச  செயலாளர் உ. உதயசிறீதர், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளர் க..பேரின்பராஜா, ஏறாவூர்ப்பற்று சமூக சேவைகள் உத்தியோகத்தர் பி.டிமலேஸ்வரன் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்

இவ்வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதியை லண்டனில் வாழ்ந்து வரும் சின்னையா ரவிக்குமார், ஏகன் ஆரூஸ், ரேவதி ஏஞ்சலீனா ஆகியோர் வழங்கியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது

  

  

  

  

  

இனவாதிகளின் பிடியில் சிக்கிய முஸ்லிம் சமூகம்..

Read More