தேர்தலில் ஒருமித்து எமது மக்கள் வாக்களித்திருந்தால்மாகாணசபையை கூட்டமைப்பு வசம்

 கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒருமித்து எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டடைப்புக்கு வாக்களித்திருந்தால்.கிழக்கு மாகாணசபையின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கும். மாறாக எமது மக்கள் அவற்றை தவற விட்டுள்ளார்கள். எமது மக்கள் வாக்களிப்பில் கூடிய சிரத்தை செலுத்தவில்லை ஆனால் எதில் வருகின்ற தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.

அவரது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதக்கீட்டில் 50 சிமென் பைக்கட்டுக்களை செட்டிபாளையம் சுடலை வைரவர் ஆலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (01.01.2016) காலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு மேற்படி ஆலய நிருவாகத்திடம்  சீமென் பைக்கட்டுகளை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

அனேகமாக எங்கும் தொழிலில்லாப் பிரச்சனைகள் இருக்கின்றன ஆனால் தொழில் வாய்ப்புக்களை வழங்கக் கூடிய வசதி வாய்ப்புக்கள் எமக்குக் குறைவாகவுள்ளன. அரச நியமனங்களை எம்மால் வழங்க முடியாது அவை எமது கையிலும் இல்லை, வீதிகள் புணரமைத்தல், மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், சிறு தொழில் முயற்சிகளுக்கு உதவுதல், உள்ளிட்ட சில அபிவிருத்தி வேலைத் திட்டங்கைள எம்மால் பெற்றுக் கொடுக்க முடியும்.

மக்கள் எம்மை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளை எடுத்தியம்பலாம் எம்மால் முடியுமானவற்றை செய்து கொடுப்பதற்கு நாம் எப்போதும் பின்னிக்கப் போவதில்லை.

கிராமங்களிலுள்ள வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்ற பிரேரணை ஒன்றை கிழக்கு மாகாண சபையில் நான் கொண்டு வந்ததன் நிமிர்த்தம் தற்போது வீதிகளில் மின் விளக்குகள் ஒளிர்கின்றன. இதுபோன்ற பல வேலைத் திட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் எமது மக்களிண் வாக்குகளைச் சிதறடித்திருந்தர்கள். இப்போதும் அவ்வாறானவர்கள் எமது மக்களிடம் வந்து அது தருவோம், இது தருவோம் என தெரிவித்து மக்களுக்களைத் திசைதிருப்பப் பார்ப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எது தந்தாலும் அது அவர்களின் சொந்தப் பணத்தில் தருவது கிடையாது. மக்களின் வரிப்பணத்தில்தான் தருகின்றார்கள். அவற்றை மக்கள் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் எதிர்வருகின்ற தேர்தலில் கடந்த காலத்தில் விட்ட தவறை எமது மக்கள் இனிமேலும் விட்டு விடக் கூடாது.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒருமித்து எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டடைப்புக்கு வாக்களித்திருந்தால். கிழக்கு மாகாணசபையின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கும். மாறாக எமது மக்கள் அவற்றை தவற விட்டுள்ளார்கள். எமது மக்கள் வாக்களிப்பில் கூடிய சிரத்தை செலுத்தவில்லை ஆனால் எதில் வருகின்ற தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.  பேரினவாதக் கட்சிகளை ஆதரித்து வாக்களிப்பதை எமது தமிழ் மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாறாக பேரினவாதக் கட்சிக்காரர்களோ, முஸ்லிம் மக்களோ எமது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதில்லை,  ஆனால் எமது தமிழ் மக்கள் தான் பேரினவாதக் கட்சிகளுக்கும், முஸ்லிம் கட்சிகளுக்கும் வாக்களித்து வருகின்றார்கள்.

ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள் மக்களின் வரிப்பணத்தில் பெறும் பணத்தில் பொருட்களைக் கொணர்ந்து எமது மக்களுக்குப் பிச்சை போடுகின்றார்கள். இவற்றை மக்கள் பெற்றுக் கொண்டாலும், வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதுபோல் எமது இளைஞர் யுவதிகள் படித்து பட்டம் பெற்றால் மற்றவர்களிடம் நாம் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை, நாம் என்றும் தலை நிமிர்ந்து வாழலாம். என அவர் தெரிவித்தார்.

  

  

  

  

  

இவர்கள் தவறு செய்தால் யார் தண்டிப்பது ; மக்கள் விசனம் !

Read More