சம்பந்தனே செத்தோழிந்து நாசமாக போ!!!!திட்டித்தீர்த்த பெண்கள். (காணொளி)

சம்பந்தனே செத்து ஒழிஞ்சு நாசமா போ என வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள் சிறிலங்காவின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனை திட்டி தீர்த்தனர்.

உண்ணாவிரதம் ஆரம்பமாவதற்கு முன் ஊர்வலம் நடைபெற்ற போது சம்பந்தனின் உருவப்படத்தை சிலர் வீதியில் இழுத்து சென்றனர். பின்னால் சென்ற பெண்கள் சம்பந்தனின் உருவப்படத்திற்கு காறி உமிழ்ந்தனர். இன்னமும் ஏன் உயிரோடு இருக்கிறாய் செத்துப் போ என திட்டி தீர்த்தனர்.

இறுதியில் சம்பந்தனின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர்.

வவுனியாவில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து இன்று காலை அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.  இந்த உண்ணாவிரதம் இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த நிலையில் சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை தீயிட்டு எரித்தனர்.

 

  

  

  

  

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏன் அஞ்சலி செலுத்த வேண்டும்!அரியம்

Read More