ஆசிரியர்கள் இடமாற்றம் உரிய முறையில் நடைபெற வேண்டும்! யூ.கே.நாபீர்

(எஸ்.அஷ்ரப்கான்)

ஆசிரியர்கள் இடமாற்றம் உரிய முறையில் நடைபெற வேண்டும் என்று நாபீர் பெளண்டேசனின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான யூ.கே.நாபீர் தெரிவித்துள்ளார்.

அமைப்பின் கல்விக் குழுவுடனான பிரதேச கல்வி நிலை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடும் போது,

கல்முனைகல்விமாவட்டத்திற்குட்பட்ட சம்மாந்துறைகல்விவலயத்தில 32 தமிழ் பாடசாலைகளும் கல்முனைக் கல்வி வலயத்தில் 22 தமிழ் பாடசாலைகளும் இயங்குகின்றன.இந்த இரண்டு வலயத்திலும் மொத்தம் 54 தமிழ் பாடசாலைகள் அவற்றில் 16785  தமிழ் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.இந்த மாணவர்களுக்கு 1108 ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகின்றார்கள்.இந்தப்பாடசாலைகளில்நிர்வாகரீதியாகபௌதிக வளப்பங்கீடு.ஆசிரியர் இடமாற்றம் ஏனைய விடயங்கள் குறைபாடுகளாகவே இருந்து வருகின்றது

இப்பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் இப்பாடசாலைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தனியான கல்வி வலையமாமாக மாறவேண்டும்.

மேலும்சம்மாந்துறைகல்விவலயத்தில்ஆசிரியர்களின்பற்றாக்குறைஇருந்தும்அவர்களைசம்மாந்ததுறைப்பாடசாலைகளில்முற்றாகஉள்வாங்கப்படாதநிலையில்சிலவெளிமாகாணபாடசாலைகளுக்குஆசிரியர்களைஇடமாற்றம் செய்வது   எந்த விதத்தில் நியாயமானது?

நிந்தவூர் ,கல்முனை மருதமுனை சாய்ந்தமருது  போன்றபாடசாலைகளில் உள்ள ஆசியர்களை சம்மாந்ததுறைப் பாடசாலைகளுக்கு இடம் மாற்றிவிட்டு சம்மாந்துறையை சேர்ந்த ஆசிரியர்களை ஏனைய பாடசாலைக்கு இடமாற்றம் கொடுப்பதற்கான  காரணம் தான் என்னவென்று புரியவில்லை

மேலும் சம்மாந்துறை கல்விவலயத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர்களை ஏனைய பாடசாலைகளுக்கு  இடமாற்றுவதற்கு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள்ஒத்துழைப்புவழங்கக்கூடாது,சம்மாந்துறைகல்விவலயத்தில்உள்ளமாணவர்களின் கல்வி சீரழிகின்ற செயல்பாட்டை செய்ய விடக்  கூடாது

குறித்த சம்மாந்துறை கல்வி வலயத்தில் கல்வி நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால்சொந்த இடத்திலேஆசிரியர்களகடமைசெய்யவைப்பதன்மூலம்பாடசாலைகளில் (பிரதேச கல்வியினை முன்னேற்ற முடியும்.)

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட, முறையற்ற விதத்தில் இடம்பெறும் ஆசிரியர் இடமாற்றம் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் இது விடயமாக   வலயக் கல்விப் பணிப்பாளர் கவனம் எடுப்பது சிறந்தது.
பெண்களின் இடமாற்றத்தை இரத்து செய்து ,எம்குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும் ,தாயையும் குழந்தையையும் பிரித்து தாய்சேய் உரிமை பாதுகாத்து , பிள்ளை ஓர் இடத்தில் தந்தை ஓர் இடத்தில் தாய் வேறொரு இடத்தில் பிரிந்து , மன உளைச்சலுடன் தூரப் பிரதேசத்தில் கற்பிபிப்பது சிரமம் அல்லவா? எனவே இது விடயத்தில் உயரதிகாரிகள் கவனம் எடுத்து செயற்பட  வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

த.தே.கூட்டமைப்பின் அறிவிப்பை அரசியல் கைதிகள் நிராகரிப்பு! போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக எ

Read More