'தம்பி பேய் இன்னும் வரல' - கிஷான் இயக்கியுள்ள குறுந்திரை

மட்டக்களப்பை பொறுத்த வரையில் மட்டு சினிமா துறை பின்தங்கிய நிலையிலே தான் இருக்கின்றது என்னும் சிலரின் கூற்றை முழுதாக உடைத்திருக்கும் குறுந்திரை தான் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு சாந்தி சினிமாவில் திரை ஏறிய 'தம்பி பேய் இன்னும் வரல' குறுந்திரை.

மட்டக்களப்பை பிரதிநிதித்துவ படுத்தும் 17 வயது நிரம்பிய சிறார்களால் உருவாக்கப்பட்டுள் திரைபடத்துக்கு கிடைத்த வரவேற்பு என்பது மட்டு சினிமாவின் வளர்ச்சியை காட்டுகின்றது .

அரங்கு நிறைந்த காட்சி ,qube HD காட்சி தொழினுட்பம், 5.1 DTS இசை கலவை என்று தொழினுட்பங்களிலும் புதுமைகளை புரிந்துள்ளது இந்த குறுந்திரை.

மேலும்,கிஷான் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை பிரமோதயா மற்றும் heart music இணைந்து வளங்கியுள்ளது Vijay rockers Batticalo v.kisanth ,Mr Yaanu Herat music
மற்றும் Mr .Tileepan dharma go local இவர்கள் தயாரிபு உதவியையும் வழங்கி உள்ளனர்.

இசை AJ Jeron
படத்தொகுப்பு S.Krish கவனித்திருக்கின்றனர் .
இதற்கு, ஒளித்தொகுப்பை பிருந்தாபன் வழங்கியதோடு கலை மற்றும் ஒப்பனை சரோன்
இசை கோர்ப்பு கேஷாந்த்
காட்சி விளைவு கிந்துஷன்
வர்ணம் ராதயன் (GR magic)

மேலும் டெனிக்,நிலோ,யுகேஷன்,சரோன்,கேஷி, தயான்,தனு,சேனு,யானு ஆகியோர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளதுடன் கதை திரைக்கதை வசனம் மற்றும் மேற்பார்வை மனோஜ் ஆல் படைக்கப்பட்டுள்ளது.

சிறப்பான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் தம்பி பேய் இன்னும் வரல குறுந்திரை மட்டு குறுந்திரை வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை என பலர் தெரிவித்துள்ளனர்.

  

  

  

  

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை!

Read More