களுவாஞ்சிகுடியின் முதற் பெண்மணி வைணவி அவர்களுக்கு கிராமத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

 இலங்கை கல்வி நிருவாக சேவை  நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி நிருவாக சேவை அதிகாரியாக நியமனம் பெற இருக்கும் களுவாஞ்சிகுடியின் முதற் பெண்மணி  பாஸ்கரன் வைணவி அவர்களுக்கு கிராமத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இத்துறையில் அவரது எதிர்காலம் சிறந்து விளங்க இறைவனை வேண்டி நிற்பதாகவும் களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் அ.கந்தவேள் அவர்கள் தெரிவித்தார்.

  எமது கிராமத்தினைப் பொறுத்தமட்டில் கல்வியில் வளர்ச்சியடைந்த கிராமமாக காணப்பட்ட போதும், இவ்வாறான இலங்கை நிருவாகத்துறைசார் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் அண்மைக்காலத்தில் அந் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது கல்வி நிருவாக சேவை அதிகாரியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

   குறிப்பாகச் சொல்லப் போனால் களுவாஞ்சிகுடி வரலாற்றில் இவ்வாறான பரீட்சையில் எந்தப் பெண்மணியும் இதுவரை சித்தியடயவில்லை அந்த வெற்றிடத்தை நிரப்ப தனது முழு மூச்சையும் பரீட்சையில் செலுத்தி சித்தியடைந்து எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
  இதனை போன்று எமது கிராமத்தில் உள்ள இளம் சமூதாயம்    தொடர் சாதனைகளை நிலைநாட்ட  முயற்சிகளை மேற் கொண்டு,  தங்களை அதற்காக அற்பணித்து செயற்பட வேண்டும்.

   
இவ்வாறனதோர் நல்ல நிலையை இம் மாணவி எட்டிப்பிடிக்கும் வரை பல வழிகளிலும் துணையாக நின்று செற்பட்ட உறவினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் அமெரிக்கா மற்றும் வகாமஸ் நாடுகளுக்கு பயணம்.

Read More