கொம்மாதுறை விளையாட்டுக் கழகத்தின் இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவு

கொம்மாதுறை இளைஞர்கள் விளையாட்டுக் கழகம் வட மாகாண ரீதியில் நடாத்தி வருகின்ற மென் பந்தாட்டத் தொடரில் 8 ஓவர் கொண்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு மல்லாகம் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகமும் கொக்குவில் AB விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றிருக்கின்றது.

மேலும், 5 ஓவர் கொண்ட தொடருக்கு கொக்குவில் AB மற்றும் வதிரி ஸ்ரீ முருகன் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன.இந்த இறுதிப் போட்டிகள் அனைத்தும் எதிர் வரும் 31 ஆம் திகதி மின் ஒளியில் நடைபெற உள்ளது .இந்த இறுதிப் போட்டிகளுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம், சிவாஜிலிங்கம், சுகிர்தன் மற்றும் சிவயோகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

  

மக்களுக்கான தீர்வினை பெறுதவற்கான அழுத்தத்தை கொடுக்கும் வெளிப்பாடே எழுக தமிழ்

Read More