பாசிக்குடா கடற்கரை பகுதியில் உயிரிழந்தவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது

பாசிக்குடாவிற்கு குடும்பத்தாருடன் சுற்றுலாவிற்காக வந்த கம்பளையைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலம் இன்று (30) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

கெசல்வத்த வீதி கத்துகெட கம்பளையைச் சேர்ந்த எச்.சாந்தகேவா வயது (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

நேற்றைய தினம் கல்குடா பொலிசார் மற்றும் மீனவர்கள் சடலத்தினை தேடும் பணியில் ஈடுபட்டபோதும் சடலம் கிடைக்காத நிலையில் இன்று பாசிக்குடா அமயா சுற்றுலா விடுதிக்கு அண்மித்த கடற்கரை பகுதியில் உயிரிழந்தவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (29) குடும்பத்தாருடன் சுற்றுலாவிற்காக வந்த நிலையில் இச்சம்பவம் பிற்பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். நேற்றைய தின தேடுதலின்போது சடலம் கிடைக்காத நிலையில் இன்று (30) கரையொதுங்கியுள்ளது.

மேலதிக விசாரணையை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

  

  

  பெரியபுல்லுமலை பாடசாலைக்கு ஆசிரியர்களை வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.

Read More