எதிர்கால சிந்தனை அமைப்பின் ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

(ரமணன் - வாழைச்சேனை)கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேசத்தில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் முழுநேர கருந்தரங்கு இன்று(29.12.2016) மட்/ககு/வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை Future Mind அமைப்பினரும், மற்றும் Plan international Srilanka அமைப்பினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.  

இந்நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களான A.சதானந்தன், மகேந்திரன், கிருபைராசா மற்றும் VTA கணணி பயிற்றுவிப்பாளர் பைசல், உதயராசா ஆகியோரும், தொழில்முயற்சி சேவை பணியக(ISB) வெளிக்கள உத்தியோகத்தர் த.சதீஸ்வரன்; மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கோகிலா ஆகியோரும் கலந்துகொண்டு இக்கருத்தரங்கினை சிறந்த முறையில் வழிநடத்தினர்.

இக்கருந்தரங்கில் கோறளைப்பற்று, வாழைச்சேனைப் பிரதேசத்தில் இருந்து சுமார் 50 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு, தங்களது எதிர்கால நோக்கத்தினை வளப்படுத்தும் முறைகள் சம்பந்தமாக பூரணமான அறிவினைப் பெற்றுக்கொண்டனர், இக்கருத்தரங்கு எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக இதில் பங்குகொண்ட பயனாளர்கள் அனைவரும் கூறியதோடு, கருத்தரங்கு நிறைவில் தொழில்பயிற்சிக்கான விண்ணப்பங்களையும் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

  

  

  

  

  

பெரியகல்லாறு தேசிய சேமிப்பு வங்கி கிளையினால் புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு

Read More