வெளிநாட்டுக்கு ஹெரோயினை கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கைது

(மண்டூர்.நிலா) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஹரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கட்டார் நாட்டுக்கு செல்லவிருந்த இளைஞர் ஒருவரிடம் அங்கு தொழில் புரிந்து வரும் நபர் ஒருவரிடம் ஒப்படைக்கும் படி பொதி ஒன்று குறித்த பெண் கொடுத்து விட்டு சென்ற நிலையில் அந்த பொதிமீது சந்தேகம் கொண்ட இளைஞன் பொதியினுள்  அழகான முறையில் தைக்கப்பட்டிருந்த நீண்ட காச்சட்டையின் பட்டிப்பகுயில் ஹெரோயினை பைக்கற் ஙட்பமான முறையில் வைத்து தைக்கப்பட்டிருந்ததாகவும்.

பின்னர் வெல்லாவெளி பொலிஸாருக்கு சம்பவம் பற்றி தகவல் வழங்ப்பட்டது. பின்னர் பொதியினை கையழித்த பெண்னை பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் கடந்த திங்கட்கிழமை(26) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர் இன்நிலையில் தொடர்ந்து பொலிஸாரின் பாதுகாப்பில் குறித்த யுவதியை ஏழு நாட்கள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவான் எஸ்.றிஸ்வி உத்திரவிட்டுள்ளர்.

சர்வதேச வலையில் இலங்கை சிக்கவேண்டும்: தமிழர் தரப்பு அதைச் செய்யவேண்டும்.

Read More