கள்ளத்தொடர்பு அம்பலம் ; மனைவியை எரித்த கணவன், திருமலையில் சம்பவம்

கணவன், மனைவியின் உடலில் தீ மூட்டிய சம்பவம் ஒன்று திருகோணமலை கந்தளாய் - தம்பலகாமம் பிரதேசத்தில் நடந்துள்ளது.

தம்பலகாமத்தில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்ததாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரியூட்டியதில் படுகாயமடைந்த 23 வயதான மனைவி ஆபத்தான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் கள்ளத் தொடர்பு குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கணவன் பெண்ணின் உடலுக்கு தீ மூட்டியதாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

Read More