உலக கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி ;மட்டக்களப்பில் அழைப்பு சுவரொட்டிகள்

மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணிக்கான அழைப்பு சுவரொட்டிகள் இன்று (30/12/2016) தமிழ் மக்கள் பேரவையினால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.


உலக கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணியாக எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி சனிக்கிழமை மட்டு நகரில் நடைபெற இருப்பதாகவும் இச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இச்சுவரொட்டியில் “உணர்வு பூர்வமாக கலந்து எமது உரிமையை பிரகடனம் செய்வோம், அடிமையாய் வாழ்வதை விட உரிமைக்காக ஒன்றிணைவோம், எமது உரிமையை நாமே உரத்து கேட்போம், உரிமையை கேட்பது இனவாதமல்ல அதை மறுப்பதே இனவாதம், மெளனத்தைக் கலைத்து உணர்வோடு ஒன்றிணைவோம்” என அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், "இணைந்த வடகிழக்கே தமிழர் தாயகம் என்பதை வலியுறுத்தல்", "யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை உலகிற்கு உரத்து சொல்லல்", "தமிழர் தேசம் அவர் தம் தனித்துவமான இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையிலான சமஷ்டி தீர்வினை வலியுறுத்தல்" "தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட குடியேற்றத்தை தடுத்தல்" போன்ற தமிழர் உரிமை அடங்கிய பல கோரிக்கைகள் அடங்கியதாக இப்பேரணி இடம்பெற உள்ளதாகவும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  

  

எப்போது விடியும்? RPFஇனால் வீடு புனரமைப்புக்கு நிதியுதவி.

Read More