கருணைக் காலம் இன்றுடன் நிறைவு ; அபராதத் தொகை அறவிடப்படும்

அபராதத் தொகை அறவிடப்படாமல் வாகன பரிமாற்றத்திற்காக வழங்கப்பட்டிருந்த கருணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதற்காக மீண்டும் கருணைக் காலம் வழங்கப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது பெயருக்கு மாற்றப்படாத வாகனங்களை பதிவு செய்து கொள்வதற்காக வாகன உரிமையாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் குறித்த கருணைக் காலம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது நிலவும் சட்டங்களுக்கு அமைய வாகனம் பரிமாற்றப்பட்டு 14 நாட்களுக்குள் அது புதிய உரிமையாளரின் பெயருக்கு பதிவு செய்யப்படவேண்டும்.

எவ்வாறாயினும் , இன்றுடன் குறித்த கருணைக் காலம் நிறைவடையும் நிலையில் , தாமதமாகி பதிவினை மேற்கொள்ள அபராதத் தொகை அறவிடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

என்னை 30ற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்!! பெண் போராளி

Read More