லொத்தர் சீட்டு விற்பனை நிறுத்தம் - தேசிய லொத்தர் சபை

லொத்தர் சீட்டு விற்பனை செய்வதை ஜனவரி முதலாம் திகதி முதல் இடை நிறுத்த உள்ளதாக லொத்தர் சீட்டு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வருடம் முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலை 30 ரூபாவாக அறவிடப்படும் என அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

இந்த முன்மொழிவை அரசாங்கம் நிராகரிக்காவிட்டால் லொத்தர் சீட்டு விற்பனை செய்வதை ஜனவரி முதலாம் திகதி முதல் இடை நிறுத்த உள்ளதாக தேசிய லொத்தர் சபை இன்று அறிவித்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் தீர்மானம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் என தேசிய லொத்தர் சபையின் தலைவர் கிரிஷாந் மரம்பகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு லொத்தர் சீட்டு ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமாயின் லொத்தர் சீட்டு துறையில் பெரிய இழப்பு ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சு அல்லது இரண்டு லொத்தர் சபையின் தீர்மானங்களாக இருக்க கூடும் என தேசிய லொத்தர் சபையின் தலைவர் கிரிஷாந் மரம்பகே கூறியுள்ளார்

டெங்கு காய்ச்சல் காரணமாக நாவட்குடாவைச் சேர்ந்த யுவதி மரணம்

Read More