பாசிக்குடா கடலில் நடந்த சோகம்!

பாசிக்குடாவுக்கு குடும்பத்தாருடன் சுற்றுலா வந்,த கம்பளையைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கெசல்வத்த வீதி, கத்துகெட கம்பளையைச் சேர்ந்த, எச்.சாந்தகேவா வயது (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாலம் போன நபரை தேடும் பணியில், கல்குடா பொலிஸாரும் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாசிக்குடாவில் பாதுகாப்பு படையினர் அதிகளவிலான சுற்றுலா விடுதிகளை நடத்துகின்றனர்

Read More