அம்பாறை மாவட்ட மக்களுக்கு விரைவில் காணி அனுமதிப்பத்திரம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள நீண்ட கால குடியிருப்பாளர்களுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்குள் காணி உறுதி பத்திரத்தினை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

சமனபெத்த சரண என்ற இறுதி சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் நலன்புரி சங்கத்தின் மூன்றாவது ஆண்டு விழா நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், இதன்போது உகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வரும் குடியிருப்பாளர்களுக்கு 350 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இதன் போது அனோமா கமகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மல்வத்தையில் எலும்புக்கூடு மீட்பு

Read More