மட்டு அரசஅதிபர் நிதி மோசடி! மூடிமறைக்க கூட்டமைப்பு முயற்சி?

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கச்சேரி நிதியை மோசடி செய்து தனது சோந்த தேவைக்கு பயன்படுத்தியுள்ளமை விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மட்டு அரசஅதிபருக்கு எதிரான மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக கடந்த யூன் மாதம் விசாரணை செய்த உதவி தேர்தல் ஆணையாளர் தலைமை யிலான  சுசந்த டீ சில்வா மற்றும் முகம்மட் மஹ்ருப் ஆகியோர் அடங்கிய குழுவினரால் மட்டு அரசஅதிபர் அவர்கள் 2015 ஆம் ஆண்டு  அரசாங்கத்தினால் மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை  முறைகேடான விதத்தில் தனது சோந்த தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக எரிபொருள் கொடுப்பனவினை சம்பளத்துடன் பணமாக பெற்றுவந்த அரசாங்க அதிபர் அவர்கள் அலுவலக பிரத்தியோக உத்தியோகபூர்வ 
(EP-KQ-8216) வாகனத்திற்கான எரிபொருள் செலவினை எரிபொருள் கட்டளைகளைப் பயன்படுத்தி பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்

அரசாங்க அதிபரின் தங்குமிட விடுதிக்கான சமையல் பயன்பாட்டிற்கு பாவிக்கப்பட்ட சமையல் எரிவாயுக்கான கொடுப்பனவுக்கு வழங்கப்பட்ட பணமும்  நிதிப்பிரமாணத்திற்கு முரணாக மோசடி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு எரிபொருள் கொடுப்பனவிற்காக தொகை வழங்கப்பட்ட 140000 ரூபா பணமும் மேலும் அவரது விடுதிக்கான சமையல் பயன்பாட்டிற்கு பாவிக்கப்பட்ட சமையல் எரிவாயுக்கான கொடுப்பனவாக வழங்கப்பட்ட  82000 ரூபா  பணமும்  என மொத்தமாக  222000 ரூபா பணத்தினை நிதிப்பிரமாணத்திற்கு முரணாக அரசாங்க அதிபர் மோசடி செய்துள்ளதாக   விசாரணைக் குழுவினால் குற்றம் சாட்டப்பட்டு அது  உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னுடைய நிதி மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக தான் மோசடி செய்த 222000 ரூபா பணத்தை  அரச திறைசேரியின் கணக்கிற்கு மட்டு அரசாங்க அதிபர் பணமாக செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதே மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இதற்கு முன்னர் கடந்த  2012 2013 2014 ஆண்டு குறித்த அரசாங்க அதிபர் மீது சாட்டப்பட்டபோதும்  இதேபோன்று விசாரணை செய்யப்படாது  அது மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரச அதிபரின் குறித்த மோசடி குறித்து பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண விடயம் என கைவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறித்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாமென தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 
 
 தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனம் காப்பது ஏன்? 


சாதாரண கிராமமட்ட அதிகாரிகளின் மோசடிகளை சுட்டிக்காட்டி நேரடியாக குற்றம் சுமத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிதி மோசடி தொடர்பாக வாய்திறக்காது மௌனம்காப்பது ஏன்?  மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களில் உண்மைகள் வருவதை தடுப்பதற்கும் ஊடகவியலாளர்கள்  மீது முறைப்பாட்டினை பதிவுசெய்து அவர்களை பழிதீர்க்க நினைப்பதற்கு காரணம்  இதுதானா? ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படும்போது கூட்டமைப்பு அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கததன் காரணம் என்ன?

அரசாங்க அதிபர் அரசியல்வாதிகள் எல்லோரும் இணைந்து அப்பாவி பொதுமக்களை ஏமாற்றுகின்றார்களா? 50000 10000 ரூபாய் பணமோசடி செய்பவர்களை மேடையில் சுட்டிக்காட்டும் அரசாங்க அதிபரும் அரசியல் வாதிகளும் இதுபோன்ற இலட்சக்கணக்கான மோசடிகளை பேசாதது ஏன்?

இப்போதுதான் தெரிகிறது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்ள்கு ஊடகங்களை அனுமதிக்காததன் காரணம்.

எத்தனை தடைகள் விதித்தாலும் உண்மைகள் ஒருநாள் வெளிவந்தே தீரும்

  

  

  களுவாஞ்சிகுடி வைத்தியசாலை அபிவிருத்தி கட்டடம் மட்டுமே!

Read More