திருகோணமலையில் பொலிசார் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் ஸ்தலத்தில் பலி இருவர் படுகாயம்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியொன்றை திருடி சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக நேற்று (27) இரவு பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது முச்சக்கரவண்டியில் சந்தேகநபர்கள் தப்பி செல்வதற்கு முயற்சித்த போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்த பொலிஸார் அதனை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளனர்.

எனினும் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

உரிய நடவடிக்கை எடுக்குமா மின்சாரசபை?

Read More