திருகோணமலையில், 1100கிராம் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

திருகோணமலையில், ஒரு கிலோ நூறு கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதில், திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஆனமடுவ மஹவுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஏ.ரணதுங்க என்பவரே தடுப்புக் காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலையத்தில் உள்ள குறித்த நபரின் அறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போதே கஞ்சா மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமலையில் வீட்டுத் திட்டம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி!

Read More