களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் நீரில் மூழ்கி பலி

திருகோணமலை அடம்பொட வெட்டைப் பகுதியிலுள்ள களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நல்லையா மகேஸ்வரன் (32 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீச்சு வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர் நீரில் விழுந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.

அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால் அவர் நீரில் விழுந்திருக்கலாம் என அவரது மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 ​டெங்கு காய்ச்சலினால் யுவதி உயிரிழப்பு!

Read More