மாறு வேடத்தில் நின்ற பொலிஸ் அதிகாரிக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கட்டார் நாட்டில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கை தொழிலாளி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாறு வேடத்தில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 1,500 கட்டார் ரியால்களுக்கு கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்ய முயன்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டோஹா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய சந்தேகநபருக்கு நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இலங்கை நபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 20 இலட்சம் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்த கஞ்சா போதைப் பொருள் மற்றும் பணம் என்பன அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

சிறை தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் நபரை நாடு கடத்துமாறும் டோஹா குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவரைக் கொலை செய்த இலங்கைப் பெண் ; நாடு கடத்தப்பட்டால் உயிருக்கு ஆபத்து

Read More