பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பதவிப்பிரமாணம்

கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தனிப்பட்ட விஜயமாக வெளிநாடு (ஈரான்) செல்கின்ற காரணத்தினாலேயே சி.தண்டாயுதபாணி கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மதியம் 1.00 மணி அளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக ஒப்பமிட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமிக்கு தங்க வேலாயுதத்தை நேர் கடனாக வழங்கும் நிகழ்வு

Read More