பிரதேச செயலாளர்களின் கைத்தொலைபேசிகளுக்கு தடைவிதித்த மாவட்டசெயலகம்!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்குச் சென்ற பிரதேச செயலாளர்களுக்கு தங்களது கைத்தொலைபேசியை எடுத்துச்செல்ல மாவட்டசெயலக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக பிரதேச செயலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(26) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கே இந்த தடைவிதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இலங்கையின் நிர்வாகசேவையில் மிகவும் மதிக்கப்படவேண்டிய பொறுப்புவாய்ந்த பதவிகளில் உள்ள பிரதேச செயலாளர்களை மிகவும் தரக்குறைவாக நடத்திய சம்பவம் இன்று மாவட்டசெயலகத்தில் நடைபெற்றுள்ளதாக பிரதேச செயலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு ஒழிவுமறைவு இன்றி சேவை வழங்கவேண்டிய அபிவிருத்திக்குழு நிர்வாகம் அதனை இரகசியமாக நடத்தமுட்பட்டதோடு அதில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர்களின் கைத்தொலைபேசிகளை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல அனுமதிமறுத்தமை அவர்களின் பதவியையும் சேவையையும் அவமானப்படுத்தியுள்ளதாகவும் இது குறித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி(காணொளி)

Read More