போலிக் கடவுசீட்டில் இலங்கை வந்து சென்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ; இந்திய ரோ தகவல்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆட்சேர்க்கும் ஒருவர் இலங்கைக்கு மத விடயங்கள்தொடர்பில் பயணங்களை மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள பெங்களுரை சேர்ந்த 23வயதான ஆபிட்கான் என்பவரே இலங்கைக்கு சென்று வந்ததாக இந்திய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கான், இந்தோனேசியா ஊடாக சிரியா செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள தமது நண்பி ஒருவரை சந்திக்க செல்லும் நோக்கில் அவர்இலங்கைக்கு ஊடாக செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அவர் இலங்கைக்கு போலியான கடவுச்சீட்டின் மூலமே பயணம் செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது

பாரிசில் தமிழ்த்தேசிய உணர்வாளர்களால் ஜனா நையப்புடைப்பு

Read More