கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் தமிழ் அகதிகள்!

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்ற நிலையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம்  தமிழ் மக்கள் அங்கு அகதிகளாக வாழ்ந்துவருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

இந்த அகதிகளை இலங்கைக்கு அழைத்துவந்து மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணசபையின் வரவு –செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (21) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்ற அந்த அகதிகளின்; நிலைமை மற்றும் அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எவரும் பேச இந்தச் சபையில்  முன்வருவதில்லை' என்றார்.

'இந்தச் சபையில் இன விகிதாசாரம் பற்றிப் பேசப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் குடிசன மதிப்பீடு செய்யப்பட்டபோது, 74 சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்திருந்தார்கள்.

தற்போது அந்த விகிதாசாரம் 40 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்குக் காரணம் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் என்பதை சகலரும் கவனத்திற்கொள்ள வேண்டும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைம்பெண்கள்  இருப்பதாகவும் அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருப்பதாகவும்;  தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பாதிக்கப்பட்ட மக்களை, கிராமங்களை முன்னுரிமைப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

பஸ் விபத்தில் 12 பேர் காயம்

Read More