மண்முனைப்பற்று பிரதேச கலாசாரகீதம் தெரிவு செய்யப்பட்ட முறைமை நீதியானதா?

கடந்த 2015ம் ஆண்டு முதன்முதலாக மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தினால் அதன் பிரதேச கலாசார கீத வரைபொன்றும் மகுட வாக்கிய வரைபொன்றுக்குமான பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு ஒரு போட்டியடிப்படையில் பிரதேச பொதுமக்களிடமிருந்துவிண்ணப்பங்கள்  பெறப்பட்டன அவற்கான அறிவுறுத்தல்களில் பின்வரும் விடயங்கள் அடிப்படை அம்சங்களை உள்ளடக்கப்பட்டிருந்தன.

1.    பிரதேசத்தில் சிறப்பினை கூறுவதாக அமைய வேண்டும்.
2.    ஆகக் கூடியது 40 வரிகளுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
3.    பிரதேச கலையம்சங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும்.
4.    பண்பாடு விழுமியங்கள் என்பன தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
5.    செய்தொழில் பொருளாதார மேம்பாடு என்பனவும் கூறப்பட வேண்டும்.

இதன் பிரகாரம் பிரதேச கலாசார கீதத்திற்கு இரண்டு விண்ணப்பங்களுக்கும், மகுட வாக்கியத்திற்கு இரண்டு விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றிருந்தன. அடுத்து வந்த  2016ம் ஆண்டுக் கலாசார போரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் பிரகாரம் விண்ணப்ப முடிவுத்திகதி மேலும் கால நீட்டம் செய்யப்பட்டு இறுதியாகக்  கடந்த ஜூன்மாதம் மொத்தம் ஏழு விண்ணப்பங்கள் கீதத்திற்குச் சேர்க்ப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இது தொடர்பாக அடுத்து நடைபெற்ற நிருவாகச் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோது,

1.    குறித்த விண்ணப்பங்கள் யாவும் கண்ணியமான முறையில் இரகசியமாகப் பேணப்பட வேண்டும் எனவும்
2.    மன்முனைப் பற்றுப் பிரதேசம் சாராத சிறந்த நீதியான நடுவர்கள் மூவருக்கு தெரிவுக்காக அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அத்தோடு கலாசார
கீதமானது நீண்ட காலத்திற்கு நின்று நிலைத்திருக்க வேண்டிய தொன்றாகையினால் தெரிவு செய்யப்படும் கீதம் பரிபூரண அம்சங்களை உள்ளடக்கிய தொன்றாக அமைய வேண்டும் என்பதிலும் கரிசனை செலுத்தப்பட்டது.

இதன் பிறகு நடைபெற்ற கலாசார பேரவைக் கூட்டமொன்றில் கலாசார கீதம் சமர்ப்பித்த பாடலாசிரியர்கள் அனைவரும் அக் கீதத்தை இராகத்துடன் பாடி, அது அடங்கிய ஒலித் தட்டை வழங்கினால் அது தேர்விற்கு இலகுவாக அமையும் என்ற கலாசார உத்தியோகத்தரின் கருத்தினை ஏற்றுக் கொண்டு பலர் அவ்வாறு ஒலித் தட்டைச் சமர்ப்பித்தனர். சிலர் சமர்ப்பிக்காம் விட்டிருக்கலாம். ஆனால் போட்டி விதிகளுக்கு இசைவாக அப்பாடலாக்கங்கள் சிறந்த துறைசார்ந்த நடுவர்களுக்கு அனுப்பிவைக்கப்படாமல் தமக்கு வேண்டிய அல்லது சிலரின் தனிப்பட்ட செல்வாக்கு, அறிமுகம் சம்பந்தபட்ட இருவருக்கு மட்டுமே ( போட்டியில் கலந்து கொண்ட ஒரு    சிலரின் திருப்தியைப் பெறும் வகையில் ) ஒலித்தட்டு தவிர்ந்த ஏனைய பாடல் வரிகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டன. அதுவும் ஒரே அமைப்பினூடாகத் தமது வேலைத்திட்டங்களை கூட்டாக எடுத்துச் செல்லும் ஒரு குழுமத்தைச் சார்ந்த நடுவர்களுக்கே அனுப்பிவைக்கப்பட்டு எலவே திட்டமிட்டவாறான தீர்வைப் பெற்றுக் கொண்டனர்.

போட்டியில் முதலாம் இடம் பெற்றதாக பகிரங்கப் படுத்தப்பட்ட ஆக்கத்தில் மண்முனைப்பற்றுப் பிரதேசம் பற்றிய முக்கிய சிறப்பம்சங்கள் எதுவுமே இடம் பெறவில்லை. அதுபோக ஒரு சுமாரான கீதமாகக் கூட கவித்துவ உணர்வுகளினூடாக முடியாதொரு நிலையில் அதற்காக  வழங்கப்பட்ட ஆலோசனை நிபந்தனைகளில் எவையும் உள்ளடங்கப்பட்டிருக்கவில்லை.அப்பாடல் வரிகள் பின்வருமாறு இதனைப் பொதுமக்களே நன்றாக  ரசித்து சுவைத்துப் படித்துப் பாருங்கள். தீர்ப்பையும் தெரிவியுங்கள்.

தெரிவு செய்யப்பட்ட மண்முனைப்பற்று பிரதேச கலாசாரகீதம்
---------------------------------
தாளம் :- ஆதி

பண்பாடு கலைவளம்
வண்ணமுறும் தாயகம்
பண்டுலக நாச்சியாண்ட
மண்முனைப்பற்று வாழ்கவே
(பண்பாடு)

வங்கக்கடல் வாழ்வைத் தாங்கும்
கங்கையோடி களனியோங்கும்
மங்கையர் ஆடவர் எழில் சுரக்கும்
சங்கத்தமிழ் மொழி சிறக்கும்
(பண்பாடு)

முந்திரி வெள்ளரி தென்னையும்
முந்திய கைத்தறிப் பண்ணையும்
இந்து இஸ்லாம் கிறிஸ்தவம்
மந்திர மருத்துவ மண்ணகம்
(பண்பாடு)

கூத்து களிகம்பு கரகம்
கோத்திரம் வாத்தியம் ஒலிபெற
மூத்த இளம் கலைஞர்கள் ஒன்றாய்
யாத்தநூல் சிகரம் வெளிவர
 (பண்பாடு)

போட்டியில் இடம் பெற்ற ஏனைய ஆறு கீதங்களில் எமது கையில் கிடைத்த இரண்டை இங்கு தருகிறேன். அக்கீதங்கள் உள்ளடங்கிய கருத்துக் கருவூலயங்களையும் இங்கே தெரிவிக்கின்றேன். இவற்றையும் இணைத்துபடியுங்கள். அவற்றில் பொதிந்துள்ள சொல்லாடல், கருத்தாழம், அணிநடை, தொகுப்பு, கீதமொன்று எவ்வாறு அமைய வேண்டு மென்பதையும் நடுநிலையாக  நின்று நோக்குங்கள்.

முதலாவது பாடல்
---------------
விருத்தப்பா

மட்டுமா நகரின் மறைந்த ராச்சியமாம்
மண்ணேறு முனை அதன் பெயராம்
திட்டமாய்ச் சொன்னால் திகழ்நான்காம் நூற்றாண்டின்
மத்திய கால மென்றோதுதல் சாலுமே

பாடல்

வங்கக்கடல் அலைவந்து முத்தமிடும்
வாவியதன் அரவனைப்பில் தாலாட்டும்
எங்குமலி தெங்கு தமிழிசை ஊட்டும்
ஏற்றம் மிகு கூத்துக் கலைக் களமாகும் - மண்முனை
ஏற்றம் மிகு கூத்துக் கலைக் களமாகும்
(வங்க....)

ஈரினமும் ஓருயிர்போல் வாழும் பூமி
இந்து இஸ்லாம் பண்பாட்டினைக் காக்கும் பூமி
பேர்பெரிய நாச்சியவள் ஆண்ட காலம்
பெரும் கோயிலுடன் சிகரமும் அமைந்த பூமி
(வங்க....)

அள்ள அள்ளக் குறையாத ஆழநீரும்
ஆசையுடன் பருகிட பாலும் தேனும்
ஆற்றில் பிடித்தெடுக்கும் றால்மீனும்
அன்புடன் விருந்து வைக்க ஏற்ற சுவையே.
(வங்க....)

கற்பன்புல்லில் பின்னுகின்ற பாய்பெட்டிகள்
கண்கவரும் வண்ணமதில்  கயிறுதுடைப்பான்
கட்டழகுக் கன்னியரின் கைவண்ணத்தில்
கவின் பொருட்களாய் மாறிடுமே கடைத்தெருவில்
(வங்க....)

வந்தவரை 'வா' வென வழிகூட்டி
வண்ண நிறப் பாய் விரித்து அதிலிருந்து
வட்டாவுடன் செம்பு படிக்க மெடுத்து
இட்டமுடன் செய்தீர் பண்பாN;ட
(வங்க....)

வாழ்த்துப்பல்லவி
வள்ளுவன் வகுத்த அறம் வாழியவே
வண்ணத் தமிழ்மொழியும் வாழியவே
வற்றாத வளம் கொண்ட மண்முனைப்பற்று
வையகத்தில் என்றும் வாழ்க வாழியவே

மேற்படி பாடலில் அமைந்துள்ள சிறப்பம்சங்களில் சில வருவாறு
1ம் செய்யுள் :- கடல் முத்தமிட,வாவிதாலதட்ட,தெங்கு தமிழிசை ஊட்ட கூத்துக்கலைக் களமாக விளங்கிறது மண்முனை.

2ம் செய்யுள் :- இன ஒற்றுமை, இரு இனங்கள்,இருமதங்கள் இணைவு, இதனால் ஏற்படுத்தப்படும் பண்பாட்டினை காத்து நிற்கும் பூமியாக மண்முனைப்பற்று விளங்குகின்றது.ஆயினும் தொன்மையிலிருந்து உலகநாச்சியின் உயர் கோபுர சிகரம் கண்டபூமி, இப்பாடலில் பண்பாட்டினைக்காக்கும் பூமி என்றும், சிகரமமைந்த பூமி என்றும் குறிப்பிடப்படும் சொல்லாட்சி கவனிக்கப்படுவது.

3ம் செய்யுள் :- மட்டகளப்பு மாவட்டம் முழுவதிலும் நீர்பற்றாக் குறை கோடையில் நிலவும், ஆயினும் மண்முனைப்பற்றில் மட்டும் அள்ள அள்ளக் குறையாத ஆழநீர் கிடைக்கும். இது ஒரு விசேட சிறப்பல்லவா? மட்டுறால் விருந்து வைப்பதற்கு இன்றியமையாததொரு உணவுவகை.இவற்றை கச்சிதமாக எடுத்துகூறுவதாகும்.

4ம் செய்யுள் :-இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சிறுகைத்தொழில் முயற்சிகளில் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களாக கயிறு, துடைப்பான், கற்பன் பாய், பெட்டிகள் என்பன முன்னிலை வகுக்கின்றன. இவற்றை உற்பத்தி சொய்வோர் இங்குள்ள பெண்களே என்பதை வனப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5ம் செய்யுள் :- விருந்தோம்பல் மட்டகளப்பின் வழக்காறு,கொடுப்பது ஒன்று அதனை மனமுவந்து வழங்குவது, மற்றொன்று விருந்து கொடுப்பதிலும் பார்க்க விருந்தாளியை ஏற்றமுடன் கௌரவிப்பது முதன்மையானது. ' வந்தவரை வாவென வழிகூட்டி' என்ற வரிமூலம் இவ்வழக்காறு மிகச்சிறப்பாக சுட்டப்பட்டுள்ளது. இதனால்தான் இச்செய்யூளில் 'இட்டமுன் செய்சீர்' பண்பாடு என்று வரியிடப்பட்டுள்ளது.

2வது கீதமும் அது  பற்றிய விளக்கமும்

இராகம் :- மாண்டு
தாளம் :- ஏகம்

மண்முனைப்பற்று வளர்பல கலைகள்
செவ்விய செம்மொழிச் செந்தமிழமிர்தம்
மண்ணும் விண்ணும் தானுள்ள வரைக்கும்
வளருக வாழிய நீடுழி – என்றும்
வளருக வாழிய நீடுழி
(மண்முனை.....)

தமிழரும் இஸ்லாமிய இனத்தவரும்
இந்து கிருஸ்தவ மதத்தவரும்
தனித்துவ விழுமிய மகத்துவத்தோடு
தனிமனித ஒழுக்க சமத்துவத்தோடும்
பண்பாடு பரிணமிக்க ஒற்றுமையோங்க
அன்பெனும் கொடியில் பூத்த மலர்களாய்
ஆன்மீக மணம்வீசும் பூமாலையதாகி
இன்பமாய் இதயங்கள் இணை சோலையிதுவே
(மண்முனை....)

கண்ணியநேயமும் காருண்ய விசுவாசமும்
வண்மையில் வாய்மையும் வறுமையில் செம்மையும்
மானத்தில் கவரிமானின் மேன்மையும்
வானத்தைப்போல உயர் மனப்பான்மையும்
கொண்டிடு கேடில் செல்வங்களென்று
குன்றிலிட்டணையா தீப ஒளியாய் - நின்று
மண்முனைப்பற்று மனிதம் வளர் நிலைக்களவே
திக்கெட்டும் புகழ்தெளிவுரப்பரப்புது காற்றலையூடாகமே
(மண்முனை....)

பல்கிப்பெருகு கல்வித் தொழில்களுண்டு
அள்ளிப் பொருளீட்டு உழைப்பாளிகளுண்டு
அலைகடலளி விலைமிகு பொருள் உண்டு
அசைகின்ற கைத்தொழில்  உழைப்புமுண்டு
வடதென்மோடி மகுடி வசந்தனோடு
கரகம் காவடி கும்மி கோலாட்ட விளையாட்டு
மந்திர வைத்திய மாந்திரீக சாத்திரமும்
பழமை புதுமைக்கலைகளும் உருவாகிடுபற்றிதுவே
(மண்முனை......)

வங்கக்கடல் வளமும் வாவியாடு மீனினமும்
பங்கமில்லா பசுமைதரு பலபயிரினமும்
காவினத்தேனும் கறவையினம் பொழிபாலும்
முந்திரி தந்திடு சுவையுமிங்கு கொண்டு
வந்திடுமே பணநிறைவும் கண்டு
நதியோரம் குயில் கூடிக் கவிபடிக்கும்
கனியுண்டு களிப்பில் கவிகள் நடிக்கும்
எங்க மண்ணிலே என்றும் வளமிறங்கும்
(மண்முனை.....)

முதலாவது 'பா'வாழ்த்துபாவாக அமைந்து, மண்முனைப்பற்றினையும் வளரும், தமிழ்க் கலைகளையும் போற்றிவாழ்வத்துவதாக அமைவதானது ஒரு கலாசார கீதத்திற்கு இசைவான சட்டமாக அமையப் பெற்றுள்ளதும், சொற்செட்டு மிக்க கீதப்பாவாரமாகவும் திகழ்வது சிறப்பம்சமாகும்.
இரண்டாவது கவிதையில் மண்முனைப்பற்றில் வாழும் ஈரினரின் மும்மத கலாசார பண்பாட்டு ஒற்றுமையை ஒருகொடியில் பூத்து எங்கும் மணம் வீசும் மாலையெனக் குறிப்பிடுவதற்கு எடுத்தாளப்படும். சொற்சிறப்பு, நயம், எழுத்துச்செம்மை, கவிதையிலக்கணம், கருத்துயாவும் செம்மையாக அமையப் பெற்று மண்முனைப்பற்றின் விழுமியத்தை விளங்க வைக்கின்றது.
மூன்றாவது கவிதையில் மனிதப் பண்புகளால் மண்முனைப்பற்றில் மானிடம் தளைத்தோங்கப்பட்டிருத்தல்,மென்மேலும் தளைத்தோங்கப்படுதலின் அவசியம் எதுகை, மோனை, சொல்லணிகளால் கவிநயம் பெறுகின்றது.

நான்காவது கவிதையில் மண்முனைப்பற்றின் தொழில், கலைகள் செழிப்புறும் விதம் ஒழுங்குமுறை எடுத்துகாட்டப்பட்டுள்ளது. அத்துடன் மண்முனைப்ற்றின் இதர வளச்செழிப்புக்கள் குறித்த பார்வை கவிதைக்கு மேலும் வளம் சேர்த்து விழுமியங்களை நிலைநிறுத்தியுள்ளதோடு, பல்கலைகளையும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறது.
ஐந்தாம் கவிதையில் மண்முனைப்பற்றின் பொருளீட்டும் முறைகளும் இயற்கை எழிலில் சிறப்பும் வளமும் கூறப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தத்தில் பல்லின கலாசாரத்தைப் பின் பற்றுகின்ற மக்கள் வாழும் பதியின் ஒற்றுமையையும், பண்பாட்டு அம்சங்களையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலான மேற்படி கீதமானது கொடுக்ககப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைவாக மண்முனைப்பற்றின் சகல அம்சங்களுமடங்கியதாக  அமைந்திருப்பது தெளிவாகின்றது.
முறையான தேர்வொன்று கண்ணியமான முறையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் அல்லது அதன் உத்தியோகத்தர்களால் செய்யப்பட்ட செய்யப்பட்டிருப்பின்

1.    யார்யார் நடுவர்களாக கடமை புரிந்தனர்.
2.    நடுவர்கள் வழங்கிய புள்ளி விபரம்
3.    தெரிவு எக்காரணங்களால் இடம்பெற்றன. என்ற இன்னோரன்ன விடயங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அதன் வருடாந்த சஞ்சிகையான 'சிகரத்' திலாவது வெளியிட்டு தமது
வெளிப்படைத் தன்மையை நிருபிக்க வேண்டும். இவ்வாறு இடம்பெற்றிருந்தால் அவ்விபரம் குறித்து ஒருநம்பகத்தன்மை சம்பந்தபட்ட போட்டியாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஏற்றபட்டிருக்கும். அப்பொழுதே வெளிப்படைத்தன்மை வேறு நம்பகத்தன்மை வேறு என்று அறியாதவர்களுக்கும் சரியாக அறிந்து கொள்ள முடிந்திருக்கும். இதனைச் செய்யத்தவறியது ஏன்? ஆரம்பம் இருந்தே இது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக பரந்துபட்டதொன்றாக இருந்தமையினால் இத்தகைய ஏற்பாடொன்றே முகாமைத்துவத்தின் பட்சபாத மற்ற செயற்பாட்டு நீதியை சான்றாகப் பெற்றுக் கொள்ள ஒரே வழியாகும். இந்நிலையில் தான் பிரதேச கலாசார பேரவையில் ஆலோசகராகவும் கலாசார அதிகார சபையில் பொருளானராகவும் பதவியேற்ற திரு.சபாரெத்தினம் விலகிச் சென்றுள்ளார்.

இறுதியாக, கலாசார அதிகாரசபை என்பது புதிதாக அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டதொரு நிறுவகம்.இச்சபையிலே கலாசார முன்னேற்றம், அபிவிருத்தி, விருதுகளுக்கான தேர்வு முதலியவற்றிற்கு பொறுப்பாக இருக்க வேண்டியதொரு சபையாகும்.

2016ம் ஆண்டுக்கான கலாபூஷன விருது விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது யார்? எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன? அவற்றை எவ்வாறு தேர்வுக்குட்படுத்தி யார்யாரை தேர்வு செய்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது? இது எதுவுமே அதிகாரசபைக்கு தெரியவராத நிலையில் வெறும் பெயர் பலகையினால் ஆகப்போவது என்ன? கலை கலாசார விழுமியங்களை உயர்ந்த நிலையிலிருந்து வளர்த்தெடுப்பது எங்ஙனம்? இதிலுள்ள உண்மைத் தன்மையைப் பொதுமக்கள் கலைஞர்கள் அறிவார்களா?

1.    திரு.மூ.அருளம்பலம்
2.    திரு.க.சபாரெத்தினம்

தனது மகனை 25 வருடங்களாக இழந்து தவிக்கும் தாயின் குமுறல்

Read More