இலங்கை வாழ் மக்கள் அனைவரும் தங்கள் குப்பைகளை போட இடம் கண்டுபிடிப்பு

சுவீடன் நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, அந்நாட்டு அரசு வெளிநாடுகளில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவீடன் நாட்டில் மின்சார உற்பத்தி பெருமளவு அந்நாட்டு குப்பைகளில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

அதாவது குப்பைகளை மறுசுழற்சி செய்து அதை மின்சாரமாக்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்நாட்டில் மின்சார உற்பத்தி பெருமளவு இதன் மூலம் தான் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் தங்களுடைய கழிவுகளை எரித்தால் கூட அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு அரசுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உள்ளது எனவும் கூறப்படுகிறது.
தற்போது அந்நாட்டில் உள்ள குப்பைகளை எல்லாம் மறு சுழற்சி செய்து முடித்து விட்டதால், மின்சாரம் தயாரிப்பதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக, சுவீடன் அரசு வெளிநாட்டிலிருந்து குப்பைகளை டன் கணக்கில் கன்டெய்னர்களில் இறக்குமதி செய்து மின் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் சுவீடனோ இதை, மறுசுழற்சி புரட்சி என்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் வெறும் 97 சதவிகிதமாக இருந்த இந்த அளவை தற்போது அந்நாட்டு அரசு 99 சதவிகிதமாக உயர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரான்சில் புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டம்

Read More