உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனுமதியுடன் சட்டவிரோத மண் அகழ்வு

திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலுள்ள தங்கபுரம் கிராமத்தில் பிரதான வீதியிலுள்ள இடத்தில் கடந்த 12.12.2016 திகதியிலிருந்து மண்,கிறவள் என்பன சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது 
இம் மண்,கிறவள் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதற்கு மூதூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்கவின் தலைமையில் நடைபெறுவதாக அறியமுடிகிறது.
இதற்கு அத்தியட்சகர் இந்திக்க  கருத்து தெரிவிக்கையில் தோப்பூர் பொலிஸ் நிலையம் திறக்க  இருப்பதாகவும் இதற்காகத்தான் இந்த மண்,கிரவளை எடுப்பதாகவும் கூறினார்.ஆனால் அங்கிருந்து பலதனியார் கனரக வாகனங்கள் மூலம் மூதூர்,கிண்ணியா போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது எனவே இந்த சட்டவிரோத அகழ்வில் பொலிஸ் அத்தியட்சகருக்கு சம்மந்தம் உண்டா? சட்டத்தை காப்பாற்றும் அதிகாரிகளே இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியா? புவியல் அகழ்வு திணைக்களத்திடம் அனுமதி பெறாமல் சட்டத்தை தானே கையில் எடுக்கும் அத்தியட்சகருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஏன் தோப்பூர் பொலிஸ் நிலையம் திறப்பதற்காக அரசால் பொலிஸ் திணைக்களத்திற்கு கொடுக்கப்பட்ட நிதி என்ன ஆச்சு? அத்தியட்சரின் பதவியை வைத்து தனியார் சொத்துக்களை பாதிக்கும் விதத்தில் நடந்து கொள்வது சரியா? என மக்கள் விசனம் தெரிவிப்பதோடு இது விடயமாக சம்மந்தப்பட்ட தலைமைகளிடம் முறையிடவேண்டுமெனவும் தெரிவித்தார்.

  

  

10 மீன் தொட்டிகளைத் திருடி ஒரு இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தவர் கைது

Read More