வியத்தகு அதிசயங்கள் நிறைந்த பட்டீஸ்வரர் ஆலயம்.


நாயன்மார்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலங்களுள் பட்டீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.இவ்வாலயமானது இந்தியாவின் பேரூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளதோடு மேல்சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகின்றது.ஐந்து அதிசயங்களை உள்ளடக்கிய 5000ம் ஆண்டு பழமை வாய்ந்த ஆலயமாக விளங்குகின்றது.அவையாவன இறவாத பனை,பிறவாத புளி,சிதைந்து போகாத சாணம்,எலும்பு கல்லாவது,வலது கால் மேல்நோக்கிய நிலையில் இறப்பது.இதுதான் இந்த அதிசயங்கள்.இங்கு நடராஜப்பெருகான் ஆனந்தத்தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக மரபுவழிச் செய்தியும் உண்டு.
பல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்றுகொண்டிருக்கின்றது.இவ் மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம் இந்த மரத்தின் பட்டையை இடித்து கஷாயம் போட்டுக் குடித்தால் தீராதவியாதியெல்லாம் தீரும் என்று சொல்லப்படுகின்றது.அடுத்து பிறவாத புளி என்று போற்றப்படும் புளியமரம் இங்கு இருக்கின்றது இந்த புளியமரத்தின் விதைகள் மீண்டும் முளைப்பதில்லையாம் புளியமரத்தின் விதைகளை முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து பல விஞ்ஞானிகள் இவ்வாலயத்திற்கு வந்து பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தார்த்துவிட்டார்கள் முளைக்கவேயில்லை இந்த புளியமரம் இந்தப்பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ளதாம் அதனால்தான் பிறவாதபுளி என்று அழைக்கின்றார்கள்.முன்றாவதாக சிதைவடையாத சாணம் கோயில் அமைந்துள்ள பேரூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு,மாடு போன்ற கால்நடைகளின் சாணம் மண்ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதில்லையாம் அடுத்து இங்குள்ளவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அந்த உடலை எரித்தபிறகு மிச்சமாகும் எலும்புகள் அந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள நெய்யாற்றில் விடுவார்களாம் அப்படி ஆற்றில் விடப்படுகின்ற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்கம்மடுகிறதாம் அதுதான் பட்டீஸ்வரரின் திருவருளாகும்.
ஐந்தாவதாக பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் நேரத்தில் தமது வலது காதை மேல்நோக்கி வைத்தபடிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் தற்பொழுதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.இந்த அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர் இங்கு அமைதியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணியை நோக்குகையில் முன்பு பட்டீஸ்வரர் ஆலயம் இருந்த இடம் அரசமரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம் அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து புல் மேய்ந்துகொண்டிருக்கும்.அதில் ஒரு பசுமாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொரியுமாம் இதனை பார்த்த ஒருவர் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தை தோண்டும்போது கிடைத்தவர்தான் பட்டீஸ்வரர் அதிசயத்துடன் கிடைத்த ஈஸ்வரனுடைய திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த நிலையில் மார்பில் பாம்பின் பூநூல் தலையில் அழகான சடைக்கொத்து சடைகளுக்கு அரணாய் இருப்பதுபோல் கங்கை பிரம்மா,விஷ்ணு அன்னமும் பன்றியுமாய் அடிமுடி தேடிய அடையாளங்கள் முதலியவற்றை பார்த்த மக்கள் பயபக்தியுடன் வழிபட ஆரம்பித்தனர்.இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர்ப் பூக்களைச் சொரிந்துகொண்டிருக்கின்றன. ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்கு மன்னன் திப்பு சுல்தான் தீடிரென வந்திருக்கின்றான்.எல்லாம் பார்க்க வந்த மன்னனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொன்னார்கள்.இறைவன் குடியிருக்கும் சிவலிங்கம் அசையும் என்று இதை நம்பாமல் சிவலிங்கத்தின் மீது கைவைத்து பார்த்திருக்கிறான் மன்னன் சுல்தான் அப்போது அவனது உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன.நெருப்பின் மீது கைகள் வைத்தது போல் துடித்தான் உடனே மயங்கி விழுந்தான்.சிறிது நேரத்திற்குப் பின் சுயநினைவு பெற்று எழுந்து தன்செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கைதொழுது இறைவனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்.இவனைப்போல் ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுக்களில் செய்திகள் காணப்படுகின்றன.
பேரூரில் இறைவனும் இறைவியும் நாற்று நட்ட வரலாற்றை இவ்வூர் மக்கள் ஆனிமாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டாடி மகிழ்கின்றனர்.நால்வரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் இங்குள்ள பட்டீஸ்வரரை வணங்கி வரவேண்டும் என்று நினைத்தாராம் எப்பொழுதும் சுந்தரரிடம் ஒரு நல்ல குணம் உண்டு எந்த ஊர் சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் பணம் கேட்பார்.ஏன் என்றால் இவர் இறைவனின் தோழன் அல்லவா இறைவனும் இவர் சொல்லை தட்டாது பணம் கொடுப்பாராம் செல்வச்செழிப்பான ஈசனுக்கே ஒருமுறை பணம் தட்டுப்பாடாம் சுந்தரர் வந்தால் பணம் கேட்பாரோ என்ன செய்வது என்று எண்ணிய பட்டீஸ்வரர் சுந்தரரிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக நிலத்தில் நாற்று நடும் கூலித்தொழிலாளியாக பச்சையம்மனுடன் சேர்ந்து நாற்று நடும்போது சுந்தரர் பார்த்து விடுகிறார் அவரை அழைத்து வந்து ஆடவைக்கிறார். சுந்தரருக்காக அம்பலத்தில் ஆடினான் இறைவன் அதனைக் கண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர் இவ்வாறே இயற்கை எழில்களுடன் சிறப்புற்று விளங்கும் பட்டீஸ்வரர் ஆலயம்.

 

  புலிக்கொடி ஏற்றிய கையால் சிங்கக்கொடியேந்திய சம்பந்தன் ஐயா. கூட்டமைப்பின் உருவாக்கம் (9)

Read More