50000 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பதவியை இழந்த அரசாங்க அதிபர்!

ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பதவியை இழந்த மட்டு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் மீண்டும் எவ்வாறு பதவிக்கு வந்தார்? அவருக்கு பதவி வழங்கியது யார்? என்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் அரச உயர் மட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 1994 வவுனியா பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலத்தில்(1995/1996) கலைக்கப்பட்ட வவுனியா நகரசபையின் விசேட ஆணையாளராக பதவிவழியாக கடமையாற்றிய போது மாட்டிறைசிக் கடைக்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்கு 50000ரூபா இலஞ்சம் பெற்றமை தெடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இனம்காணப்பட்டு தனது பதவியை 4 வருடங்கள் இழந்திருந்த மட்டு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கு பின்னர் பதவி வழங்கியது யார்?

 

நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாகவும் தாபன விதிக்கோவைக்கு முரணாகவும் இவருக்கு எவ்வாறு அரசாங்க அதிபர் பதவி வழங்கப்பட்டது என்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவரை மீண்டும் பதவிக்கு கொண்டுவருவதற்கு வன்னி தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சிவனாதன் கிசோர் மற்றும் வவுனியா பெளத்த மதகுருவினரின் தயவினால் பசில்ராஜபக்ச அவரின் மிகக்கடும் அழுத்தம் மற்றும் சிபார்சின் மூலம் நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக  வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு பின்னர் முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்ட செயலாளராகி அதன் பின்னர் வவுனியா அரச அதிபர் திரு கணேஷ் அவர்களை பதவி விலக்கி மாவட்ட அரச அதிபராக  நியமிக்கப்பட்டார் என தெரியவந்துள்ளது.

இலஞ்சம் வாங்கி குற்றத்திற்காக இரண்டு தடவைகள் பதவி இழந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை பசில்ராஜபக்சவே மீண்டும் பதவியில் அமர்த்தியதாக தெரியவந்துள்ளது.

வவுனியா உதவி அரசாங்க அதிபராக இருக்கும் போது 1993 ஆம் ஆண்டு பதவியில் இருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டவர் மீண்டும் 1994 மீளவும் வவுனியா பிரதேச செயலாளராக  நியமிக்கப்பட்டு பின்னர் 1994 ஆம் ஆண்டு மீளவும் இடைநிறுத்தப்பட்டு. மீண்டும் 1998 ஆம் ஆண்டு உதவி மாவட்ட செயலாளராக  நியமிக்கப்பட்டு பின் முல்லைத்தீவு வவுனியா அரச அதிபர் திரு கணேஸ் அவர்களை பதவி விலக்கி அரசாங்க அதிபர் பதவிக்கு வந்தவர்தான் தற்போதைய மட்டு அரசாங்க அதிபர்.

மகிந்த வழங்கிய ஆடம்பர வீடு!

தனக்கு அரசாங்க அதிபர் பதவியை வழங்கிய மகிந்தராஜபக்ச அவர்களின் குடும்பத்திற்கு மிகுந்த விஸ்வாசமாக செயற்பட்டுவந்த மட்டு அரசாங்க அதிபருக்கு மகிந்த ராஜபக்ச அவர்கள் அத்துருகிரிய மிலேனியம் சிற்றி வீடமைப்பு தொகுதியில் ஒரு ஆடம்பர வீட்டை  அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது வரை மகிந்த ராஜபக்சவின் விஸ்வாசியாக செயற்பட்டுவரும் மட்டு அரசாங்க அதிபருக்கு வந்துள்ள இடமாற்றத்தை இரத்துச்செய்வதற்கு அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான தயாகமகே அவர்களின்  ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

  

  

மரத்துக்கு உரிமை கோரும் குருவிச்சைகள்..!! வேர்களுக்கு சவால்விடும் விநோதம்…!!!

Read More