நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆறாவது நேரடி அரசவை அமர்வின் இரண்டாம் நாள் கூட்டம் தலைநகர் பாரிசில் இடம்பெற்று வருகின்றது.புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகைத்தந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இந்த அமர்வில் கூடியுள்ளனர்.அமைச்சுக்களின் செயற்பாட்டு அறிக்கைகள், கேள்வி நேரம், பிரதிநிதிகள் உரைகள் என அரசவையின் செயற் பண்புக்கு அமைய இந்த இரண்டாம் நாள் அமர்வு இடம்பெறுகின்றது.தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  

  

  

  

புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு

Read More