கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் சிவில் உடையில் பொலிஸார்! வெளியே விசேட அதிரடிப்படையினர்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் தற்போது (26/11/2016 ) இரவு நேரத்தில் சிவில் உடையில் பொலிஸார் நடமாடுவதாகவும் பல்கலைக்கழகத்தின் வெளியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

எந்த ஒரு பல்கலைக்கழகத்தினுள்ளும் உபவேந்தரின் அனுமதி இன்றி பொலிஸார் நுழைய முடியாது. ஆனால் தற்போது பல்கலைக்கழக வளாகத்தினுள் 
பொலிஸாரின் நடமாட்டத்தினால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு காணப்படுவதாக அறியமுடிகின்றது. அதேநேரம் முன் எப்போதும் இல்லாமல் இன்று விசேட அதிரடிப்படையினர் பல்கலைக்கழகத்தின் முன் வாயில் பகுதியில் பாதுக்காப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக 
உள்ளது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

 

மட்டு.கச்சேரிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பொலீசாரை கொண்டு வெளியேற்றப்பட்டார்!

Read More