பிக்குவுக்கு EP PC 3501 இலக்க வாகனத்தை வழங்கிய அரசாங்க அதிபர்!

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையிலான உறவு எப்படி உருவானது என மட்டக்களப்பு  பற்றிநாதம் விக்கிலிக்ஸிற்கு செய்தி கிடைத்துள்ளது.

அதாவது மகிந்தவின் வெற்றிக்காக மிகக் கடுமையாக அரச வளங்களை பாவித்து உழைத்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கு மைத்திரி அரசாங்கத்தின் வெற்றி சற்றும் எதிர்பாராததாக இருந்துடன் மைத்திரி அரசு உடனடியாக அரசாங்க அதிபரை இடமாற்ற தீர்மானித்திருந்தது.

குறித்த இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்காக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருடன் உறவை ஏற்படுத்திய அரசாங்க அதிபர் தனது இடமாற்றத்தை இரத்துச்செய்வதற்காக தேரரை கொழும்புக்கு அனுப்பிவைத்திருந்தார்.

கடந்த வருடம் EP PC 3501 என்ற இலக்கத்தினை உடைய கருப்பு நிற வாகனத்தை பிக்குவுக்கு வழங்கி தனது இடமாற்றத்தை இரத்துச் செய்ய கொழும்புக்கு அனுப்பிவைத்துள்ளார். குறித்த வாகனத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரும் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பயன்படுத்திய மேற்படி வாகனம் தற்போது அரச அதிபரின் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தப் படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதேநேரம் EP PC 3501 என்ற இலக்கத்தினை உடைய வாகனம் தற்போது  கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக கொழும்பில் நிற்பதாகவும் அது என்ன காரணத்திற்காக கொழும்பில் என்பது இரகசியமாக உள்ளதாக மாவட்டசெயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  மட்டக்களப்பை ஆட்டிப்படைத்த புளொட் மோகனின் சாவும் காலம் கடந்த இரகசியமும்...

Read More