கடன் பெற புதிய வழி ; முகநூல் இருந்தால் போதும்...! (காணொளி)

இன்றைய இளைய தலைமுறையினர் கடன் அட்டை பயன்படுத்துவது சாதாரண ஒன்றாகும். இந்நிலையில் வங்கியில் கடன் பெறுவது என்பது சுலபமான காரியம் கிடையாது.
 
ஒவ்வொரு வங்கியிலும், அவர்கள் தங்களுக்கென தனி அடிப்படை விதிகள் கடைப்பிடிப்பார்கள். அதைக்கொண்டு தான் வங்கி கடன் அளிக்கப்படும். இதனால் வங்கி கடன் பெறுவது மிகவும் கடினமானதாக உள்ளது.
 
முகநூல் கணக்கை சரியாக பராமரிப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்குகிறது CASHe என்னும் செயலி . இந்த CASHe செயலி மூலம் முகநூல் கணக்கை திறந்து செய்து விவரங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
 
பின்னர் நமது முகநூல் கணக்கை ஆய்வு செய்து நமக்கு கடன் அளிக்கிறது. இதன் வட்டி விகிதம் அதிகம் தான். பெறும் கடன் தொகைக்கு 30% வட்டி வசூலிக்கப்படுகிறது. 
 
முகநூல் கணக்கை ஆய்வு செய்த பின் வங்கியின் விவரங்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டும். பின்னர் உடனடியாக வங்கி கணக்கில் கடன் தொகை அளிக்கப்படும்.
 
இதுகுறித்து CASHe செயலி நிறுவனத்தின் தலைவர் ரமண குமார் கூறியதாவது:-
 
ஒருவர் கடன் அட்டை வாங்கவில்லை என்றால். அவர் நம்பத் தகுந்தவராக இருக்கமாட்டார் என்பது முற்றிலும் முறையற்றது. இதன் அடிப்படையில் தான் CASHe நிறுவனம் உருவானது.
 
வருகிற ஜனவரி மாதம் முதல் சமூக வலைதளத்தின் பயன்பாட்டின் படி ஒருவரின் கடன் மதிப்பிடும் முறையை அறிமுகம் செய்யவுள்ளோம், என்றார்.









பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் விசித்திரமான அறிகுறிகள்!

Read More