இருள் அகன்று ஒளி பிறக்கட்டும்! அம்பிளாந்துறையூர் அரியம்

இந்த தீபாவளியும் இனிப்பாக வரவில்லை!

இலங்கை அரசியல் மனம் மாறவில்லை!

இப்போதும் மாணவர்கள்மீது துப்பாக்கிசூடு!

இனவாத அரக்கனின்  இருள் சூழ்ந்துகேடு!

இல்லங்கள் தோறும் ஏதோ ஒரு ஏக்கம்!


இடர்பட்ட நிலத்தில் இராணுவ பிரசன்னம்!

இடையிடையே புத்தபகவானின் சின்னம்!

இப்படித்தான் வடகிழக்கு நிலவரங்கள்!

இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டாவது!

இன்பம் பொங்கும் இனிய ஆண்டாகட்டும்!


இனத்திற்கான எமக்கோர் தீர்வு வரட்டும்!

இருப்பு எமது மண்ணில் உறுதியாகட்டும்!

இரவல் அரசியல் இல்லாமல் போகட்டும்!

இலக்கு வென்று ஈழம் இங்கு சிரிக்கட்டும்!

இருள் அகன்று சுதந்திர ஒளி பிறக்கட்டும்!


       •---அம்பிளாந்துறையூர் அரியம்---•

யார் இவர்கள்? எம் இனத்துரோகிகள்…

Read More