ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள் !!!

வரலாற்றை நிறையப் பேர் படிப்பார்கள்,பலர் எழுதுவார்கள், மிகச்சிலபேர் இடம் பெறுவார்கள், ஒரு சிலரால் மட்டுமே வரலாறு மாற்றப்படும். சதாம் மாற்றினார் , வாழும் போது அரை நூற்றாண்டு காலம் பேசப்பட்டவர் , கொல்லப்பட்ட பின்பும் உலகம் இருக்கும் வரை பேசப்படுபவர் , புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் , படையெடுப்பின் மூலம் ஆட்சியை இழந்தவர் , அநீதியினால் கொல்லப்பட்டவர் , 

 

சதாமை பதுங்கு குழியில் மயக்க வாயு கொடுத்து நிராயுத பாணியாகக் கைது செய்து சிறை , வழக்கு , தீர்ப்பு , தூக்கு  என்று திரைக்கதையை வெகு சீக்கிரமே எழுதி முடித்து விட்டது அமெரிக்கா , 

தூக்குக்கான காரணம் சதாமை கொள்ள முயன்றவர்களை அவரது பாதுகாப்புப்  படைகள் சுட்டுத் தள்ளியதாம் , உலகில் சர்வாதிகாரிகளாக இருக்கட்டும் , ஜனநாயகவாதிகளாக  இருக்கட்டும் தனக்கு தன்னுடைய அரசுக்கு தன்னுடைய தேசத்துக்கு எதிராக செயல் படுகின்றவர்களை கொல்லும் வழிமுறையைத் தான் சதாமும் கையாண்டார் , வழிமுறை சரியற்றது என்றாலும் சதாம் மட்டும் இதற்கு விதி விலக்காய் இருந்திருக்க முடியாது என்பது மட்டுமே உண்மை.

 

புலிகள் கருணா பிளவு துரோகமும் போராளிகளின் முறியடிப்பும் பாகம் 19 நிராஜ் டேவிட்

Read More