திருகோணமலை நகரசபைக்கு சொந்தமான சந்தை இராணுவத்தினரால் மீள ஒப்படைப்பு

திருகோணமலை நகரில் அமைந்திருந்த நகரசபைக்கு சொந்தமான திறக்கப்படாத சந்தைக் கட்டடத்தை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இன்று நகர சபையிடம் மீள ஒப்படைத்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தச் சந்தை கட்டடிடம் நகர சபை அதிகாரிகளால் இன்று உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது.

திருகோணமலை நகர மத்தியில் அமைந்துள்ள மின்சார நிலைய வீதியில் உள்ள நகர சபைக்கு சொந்தமான திறக்கப்படாத சந்தை கட்டடம்  அமைந்திருந்த காணியை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கடந்த ஆறு வருடங்களாக தம்வசப்படுத்தி வைத்திருந்தனர்.

1997 ஆம் ஆண்டு அப்போதைய திருகோணமலை நகர சபை தலைவராக இருந்த பெரியபோடி சூரியமூர்த்தியினால் 65 இலட்சம் செலவில் இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு இந்த கட்டடத்தை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் நகர மத்தியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து சந்தைக் கட்டடம் தொடர்ந்து திறக்கப்படாமலே இருந்து வந்தது.

இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையினர் இச்சந்தை தொகுதியை கையகப்படுத்தி அங்கு முகாம் அமைத்திருந்தனர்.

2010 ஆம் ஆண்டு கடற்படையினர் அங்கிருந்து அகன்று செல்ல ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அதனை தமது முகாமாக பயன்படுத்தி வந்தனர்.

நல்லாட்சி அரசின் அறிகுறியாக இச்சந்தை தொகுதி நகர சபையினர் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது.

இராணுவத்தின் 221 ஆவது படை பிரிவு  கஜபா படையணியின் லெப்டினன்ட் மனோரா ஜயதிலகா இதற்கான ஆவணங்களை நகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் கிரிந்திரனிடம் வழங்கி வைத்தார்.

 

மரண தண்டனையை தளர்த்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை

Read More