விக்னேஸ்வரனை கண்டு கொழும்பு அஞ்சுகிறது மட்டக்களப்பில் தமிழனுக்கு அடிவிழுகிறது!

மட்டக்களப்பு வரலாற்றில் வீரம் விளைநிலம் என்ற பெயருக்கு சொந்தமான மட்டக்களப்பு தமிழர்களை அடிமைகளாக்கி அழகுபார்க்கும் செயற்பாடுகளை தொடர்கின்றது.

இதனை தடுக்கமுடியாது அன்னார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் இயலாமைகளும் தொடர்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் இன்று தமிழர்களின் பூர்வீகத்தை இழந்துகொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மண் தன்னுடைய தாய்மையை இழந்து மலட்டுத்தன்மை அடைந்துகொண்டிருக்கின்றது. 

பக்கத்து வீட்டுக்காரர்களும் பாதுகாப்புக்கு வந்தவர்களும் இங்குள்ளவர்களை தங்களின் பிள்ளைகளாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

இருந்தும் தன்னுடைய மண் தாய்மை இழப்பது தெரியாது அனைத்துக்கும் ஆதரவு தெரிவித்துக்கொண்டு இருக்கின்றார்கள் மண்ணின் மைந்தர்கள்.

நூறு வருட குத்தகைக்கு எம் தாய்மண் தனியார் கம்பனிகளுக்கு அடகுவைக்கப்படுகின்றது.

எல்லையில் எம் தாய்மண் அபகரிக்கப்படுகின்றது.

அபிவிருத்தி என்ற பெயரில் பங்கு இலாபங்களை பெற்றுக்கொண்ட சிலர் பல வெளிநாட்டு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

மக்களினால் வாக்களித்து அனுப்பப்பட்ட அரசியல் தலைவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பின் பெரும்பான்மையினம் அடிமையாக்கப்பட்டு இந்த நாட்டின் பெரும்பான்மையினத்தினரால் தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றனர்.

கல்வி பொருளாதாரம் பதவி அதிகாரம் என அனைத்திலும் எமது சகோதர இனத்தினர் தங்களை முதன்மைப்படுத்தி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஏறாவூரில் பிறந்த எமது கிழக்கு முதலமைச்சர் தன்னை அவமானப்படுத்திய கடற்படை தளபதியை மிகமோசமாக ஏசுகின்றார்.

இப்படி பல விடயங்கள் இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தன்னை மட்டுமல்லாது தமது தாய்மண்ணையும் இனத்தையும் அடக்கி அவமானப்படுத்திக்கொண்டிருப்பவர்களை கண்டுகொள்ளாது. அநீதிகளுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக போராடாது பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் அதிகாரிகளுக்கு தூபம் போட்டுக்கொண்டு ஆட்சியாளர்களுக்கு சோரம்போன அரசியல்வாதிகள் சில எமது தாய்மண் அழிவதை அன்னாந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

எங்களுக்கு புத்திஜீவிகள் தேவையில்லை அடிமைதொண்டர்கள்தான் வேண்டும் எங்களுக்கு போராட்டக்காரர்கள் தேவையில்லை அகிம்சைவாதிகள்தான் வேண்டும் எங்களை நம்பியவர்கள் மட்டும் வாருங்கள் மற்றவர்கள் எல்லாம் போய்விடுங்கள் என்று தன்னை அறிவாழியாக நினைத்து மட்டக்களப்பு மக்களையும் புத்திஜீவிகளையும் முட்டாளாக்க நினைக்கும் சில சட்டமேதைகளினாலேயே இன்று மட்டக்களப்பு அடிமைதேசமாக மாறிவருகின்றது.

கட்சிக்குள் புத்திஜீவிகள் தேவையில்லை என்று கூறிவிட்டு தேர்தல்காலங்களில் கொழும்பிலும் வெளிநாட்டிலும் இருந்து சட்டத்தரணிகளையும் புத்திஜீவிகளையும் தேடிப்பிடித்து போடுகின்றீர்கள் அவர்கள் புத்தகங்களை பார்த்து அரசியல் செய்கின்றார்களே தவிர தமிழ் மக்களின் துன்ப துயரங்களை பார்த்து அரசியல் செய்ததாக தெரியவில்லை.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் மக்களுக்காக பணிசெய்யாது அதிகாரிகளுக்காகவும் அமைச்சர்களுக்காகவும் ஆட்சியாளர்களுக்காகவும் பணியாற்றுவதற்காகவா தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்.

நல்லாட்சி அரசின் கைதிகளே உங்களால் சுயமாக உங்களது மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்காக இயங்க முடியாவிட்டால் போராடமுடியாவிட்டால் உங்களது பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு வெளியேவாருங்கள்.

வடமாகாண முதலமைச்சர் விக்ணேஸ்வரனை மட்டக்களப்பில் விமர்சிக்காதீர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவை விக்ணேஸ்வரனின் மறுமலர்ச்சி கொள்கைகளே. அவர் அவரது கட்சிக்கு பணியாற்றாது அவரை தெரிவுசெய்த மக்களுக்காக பணியாற்றுகின்றார் என்பதே சிறப்பு மக்களின் வழியறிந்து பணியாற்றுபவனே சிறந்த தலைவன் அந்தவகையில் விக்ணேஸ்வரன் ஐயா இன்றும் வடக்கு மக்களின் தலைவனாகவே போற்றப்படுகின்றார்.

ஆனால் கிழக்கு மண் குறிப்பாக மட்டக்களப்பு தமிழர்கள் இன்று சிறந்த போராட்டகுணமும் அறிவாற்றலும் கொண்ட தலைமைத்துவம் இன்றி தவிக்கின்றனர்;.

இன்று தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் எல்லாம் தன்னைதெரிவு செய்த மக்களுக்கு பணியாற்றுவதை விடுத்து தன்னை சேர்த்துக்கொண்ட கட்சிகளுக்காக பணியாற்றுவதையே அதிகமாக கொண்டு செயற்படுகின்றனர்.

கட்சிகளையும் தலைவர்களையும் தீர்மானிப்பவர்கள் மக்களே எனவே மட்டக்களப்பிற்கு இன்று தேவை ஊமையாக இருக்கும் மக்களை பேசவைத்து அடிமையாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களின் உரிமைகளை ஜனநாயகரீதியாக போராடிபெறுகின்ற தலைமைத்துவமே வேண்டும்.

மட்டக்களப்பில் எழுச்சியும் வேகமும் கொண்டு எமது பிரச்சினைகளை கொழும்பிற்கு சொல்லி செய்யவைக்க கூடியவர்களை தேடவேண்டிய தேவை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விக்ணேஸ்வரனை கண்டு கொழும்பு அஞ்சுகிறது ஆனால் மட்டக்களப்பில் தமிழனுக்கு அடிவிழுகிறது. மட்டக்களப்பு தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாத அல்லது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிர்வாகத்தை செய்ய திரானியற்ற தலைமைகளிடம் மட்டக்களப்பை கொடுத்துவிட்டோமோ? என்று எண்ணத்தோன்றுகின்றது.

அடக்குமுறைகளுக்குள் இருந்துகொண்டு குமுரிக்கொண்டிருக்கும் சமூகம் என்றோ ஒருநாள் கொந்தளிக்கும் போது முதலில் பலியாகுபவர்கள் அடக்குமுறைகளுக்கு மறைமுகமாக துணைபோகின்ற எம்மவர்களாகவே இருக்கப்போகின்றனர்.

எனவே இந்த காலத்தில் உங்களை நம்பியே தங்களது அரசியலை மக்கள் உங்களிடம் ஒப்படைத்துள்ளனர் எனவே நீங்கள் கட்சிகளுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் அமைச்சர்களுக்காகவும் ஆட்சியாளர்களுக்காகவும் பணியாற்றாது மக்களுக்காக பணியாற்ற முன்வரவேண்டும் இல்லை என்றால் வரலாறு உங்களை நிச்சயம் மன்னிக்காது. 

தனது கட்சிகளுக்காக கட்சி தலைமைகளுக்கு பயந்து தமக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம்செய்யும் தலைமைகளை விடுத்து தான்இருக்கும் கட்சியைப் பொருட்படுத்தாது தனக்கு வாக்களித்த மக்களுக்காக பணியாற்றுகின்ற விக்னேஸ்வரன் போன்றவர்களின் தலைமைத்துவம் குறித்து மட்டக்களப்பு மக்கள் எதிர்காலத்தில் சிந்திக்கவேண்டிய நிலைவரும்.

மட்டு.தமிழன்

 

அம்பாறையில் அனாதரவாக தனித்துவிடப்பட்ட புத்த பெருமான்.

Read More