கண்ணுக்கு நீதியான ஒன்றுபடக்கூடிய அரசியலமைப்பு விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்

சர்வதேசத்தின் கண்ணுக்கு நீதியான ஒன்றுபடக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படும் என கிழக்கு மாகண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரணியை முன்னெடுத்திருந்தது.

இந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இவை சாத்தியமாக தொழிலாளர்கள், தோழர்கள், எங்களோடு தோள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு

வீழ்வதுதான் வெற்றி, போர்க்காலம் முடிந்து விட்டது, உணர்ச்சி கொப்பளிக்க உதிரம் கொதிக்க கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், என்ற உற்சாகம் செய்யப்பட்ட காலம் வந்துவிட்டது.

எமது நாட்டிலே நாம் சேர்ந்து அமைத்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டு கொண்டிருக்கின்றது. ஆட்சியில் நாங்கள் பங்கெடுக்வில்லை.

ஆனால், எங்கள் குரலினை கேட்டு செயற்பட வேண்டிய பாரிய கடைப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு.

எமக்காக ஆற்றலை, அறிவை, உழைப்பை, உதிரத்தை, ஏன் உயிரையே தாரை வார்த்த எங்கள் தலைவர்கள், தொண்டர்கள், தளபதிகள், வீரர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரது தியாகங்களுக்குமாய் அவர்களுக்கு தலைதாழ்த்தி பொன்னான நினைவுகளில் பூத்தூவி நிற்கின்றோம்.

இவைகளெல்லாம் இதயங்களில் நிறுத்திக்கொண்டு எழுந்து நிற்கின்றோம். இனி எமக்கான பாதை எது, கொள்கை எது, எமக்கான தலைமை எது, என்பதனை நாங்கள் தீர்மானித்து விட்டோம்.

சாத்வீகம் எமது கொள்கை சம்மந்தன் எமது தலைவர், சமத்துவம் எமது இலக்கு, இவற்றினை கடைப்பிடிக்க எமக்கு அர்ப்பணிப்பு, விசுவாசம் என்பன தேவை.

விசுவாசம் அற்றவர்கள் சற்று விலகி நில்லுங்கள், நின்று நிதானித்து நிறை கண்ட பின் எங்களுடன் சேருங்கள். நடக்காது என்று நினைத்துக் கொண்டு ஏன் நடக்க வேண்டும். நடக்கும் வகையில் நாம் நடப்போம் என்பது எங்களது தாரக மந்திரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

  தேர்தல்கள் சிறந்த முறையில் இடம் பெற்றாலும் தெரிவாகும் பிரதிநிதிகள் நேர்மையற்று நடக்கின்ற

Read More