வாழைச்சேனையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பசு மாடுகள் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிகுட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஏற்றி வந்த பத்து மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன், மாடுகளை ஏற்றிவந்த இரண்டு வாகனங்களை பைறிமுதல் செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்வம் நேற்று இடம்பெற்றுள்ளது. வாகரை பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே இம்மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வாகன சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

  

  

  

  

  

தமிழர்களுடைய காணி மற்றும் வயல் நிலங்கள் வேறு சமூகத்தவர்களால் பறிமுதல்

Read More