தமிழ்தேசியகூட்டமைப்புக்கு ஏன் இந்த பதவி

எட்டாவது பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதிதலைவர் தமிழ்தேசியகூட்டமைப் பின் சார்பாக ரெரோ இயக்கத்தின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவாகியது சரியா?என்பதை ஆழமாக பரிசீலிக்க வேண்டியது எல்லோருனதும் கடப்பாடாகும்.


பிரித்தானியாவில் சர்வதேசவிசாரணை கோரி புலம்பெயர் உறவுகளால் ஒரு புலத்தில் கவனயீர்ப்புபோராட்டம்,மறுபுறத்தில் வடமாகாணசபையில் சர்வதேச விசாரணையை வலுயுத்தி மீண்டும் முதல மைச்சர் விக்கினேஷ்வரன் தீர்மானம்


இந்த இரண்டு முக்கிய இனத்தின் தேவைகளைக்கான உன்னத சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்ட இன்று (01/09/2015) இலங்கைப்பாராளுமன்றத்தில் குளுக்களின் பிரதிதலைவர் பதவி தமிழ்தேசியகூட்டமைப்பு பெற்றுக்கொண்டவிடயம் ஏற்புடையது இல்லை.
பாராளுமன்றத்தில் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகள் எடுக்கமுடியாது என்றால் எப்படி குளுக்களின் பிரதிதலைவர் பதவியை ஏற்கமுடியும்.


எதிர்கட்சிதலைவர் என்பது வேறு குளுக்களின் பிரதி தலவர் பதவி என்பது வேறு இரண்டு பதவிகளையும் ஒன்றாக பார்க முடியாது.தமிழ்தேசியகூட்டமைப்புக்கு வடகிழக்கு தமிழர்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியது எமது உரிமைக்கான குரல் ஓங்கிஒலித்து சர்வதேசரீதியாக சென்றுள்ள எமது அரசியல் உரிமைவிடயத்தை இன்னும் கூர்மையாக்கி கடந்த
65வருடங்களாக நிறைவேறாமல் உள்ள எமக்கான அரசியல்தீர்வும் கடந்தகாலத்தில் இனப்படுகொலைக்கு உள்ளான எம தினத்திற்கான சர்வதேசவிசாரணையை
வலியுறுத்தி அதற்கான தீர்வைகாணும் நோக்கில்தான் வடகிழக்கு தமிழ்மக்கள் இம்முறையும் அமோகவெற்றுயீட்டவைத்தனர் ஆனால் அவைகளை மறந்து பதவிக்காக பாராளுமன்ற கதிரைகளை தமிழ்தேசியகூட்டமைப்பு பயன்படுத்துவது கண்டிப்கதக்கவிடயமாகும்.

எதிர்கட்சிதலைவர் பதவி சம்பந்தன்ஐயாவுக்கு கிடைத்தால் அதை சர்வதேச அரங்கில் எமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்த ஒருவேளை வாய்பாக பயன்படுத்த முடியும் ஆனால் பாராளுமன்ற குளுக்க ளின் பிரதிதலைவர் பதவி சிறிலங்கா பாராளுமன்றத்தில் வடகிழக்குதாயக்கோட்பாட்டை நிராகரித்து பாராளுமன்றத்தில் முழு விடயங்களையும் ஏற்றுக்கொள்வதற்கான முன்ஏற்பாடாகவே இதனை கருதமுடியும்

வடகிழக்கிற்கு வெளியே இம்முறை தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என சுமந்திரன் மற்றும் சிலர் ஆலோசனைகளை இலங்கைதமிழரசுக்கட்சியின் மத்தியகுளு கூட்டத்தில் முன்வைத்தபோது அது வடகிழக்குதாயக கோட்பாட்டிற்கு முரணாக உள்ளதாகவும் எமது வடகிழக்குதமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்
வரை வடகிழக்குற்கு வெளியே தேர்தல்களில் போட்டியிடுவதில்லையென அங்கு கலந்துகொண்டவர்கள் ஏகோபித்து கூறினர்.
அப்படியொரு கொள்கையுடன் உள்ள கட்சி இன்று எப்படி செல்வம் அடைக்கலநாதனுக்கு பிரதி தவிசாளர் பதவிக்கு ஒப்புக்கொண்டது.சிலவேளை இவர் தமிழரசுக்கட்சி இல்லைதானே ரெலோ
தானே என்று வாய்பேசாத அப்பாவி செல்வம் அடைக்கலநாதனை சுமந்திரன் திட்டமிட்டு பழிவாங்கினாரா?என்று எண்ணத்தோன்றுகிறது.


இதில் இன்னுமொன்றையும் புரியவேண்டும் பேச்சாளர் சுரேஷ் பாராளுமன்றம் இல்லாதவேளையில் சுரேசிடம் இருந்து செல்வம் அடைக்கலநாதனை விலக்கி
வைக்க சம்பந்தரும் சுமந்திரனும் போட்ட இராஐதந்திரமாகவும் இதனை பார்க
முடிகின்றது.


எது எப்படியாயினும் இனிவரும் காலங்கள் தமிழ்தேசியத்திற்கு இருண்டகாலமாகவே பாராளுமன்ற நகர்வுகள் அமையையும் என்பதுமட்டும் உண்மை.

-அபிமன்னன்-

தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு.

Read More