கிழக்கில் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் : திறந்த போட்டிப் பரீட்சை

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற கணித விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

கணித விஞ்ஞான பட்டதாரிகள் மற்றும் ஆங்கில டிப்ளோமாதாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கமுடியும்.

திறந்த போட்டிப் பரீட்சையூடாக இந்நியமனங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

இவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1(அ) மற்றும் 3-1(இ) தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள்.

கிழக்கு மாகாணத்தின் மாகாணப்பாடசாலைகளில் 6-11 வகுப்புகளில் நிலவுகின்ற ஆசிரியர் தட்டுப்பாட்டை நிரப்புவதற்கே இப்புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறவிருக்கிறது.

விண்ணப்ப முடிவுத்திகதி  12.04.2016  என  கிழக்கு மாகாண பொதுச்சேவை  ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜி.திசாநாயக்க தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு  ஆட்சேர்ப்பு & பரீட்சைகள் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

அதிக சம்பளத்துடன் முகாமைத்துவ உதவியாளர் பதவி

Read More