பொலிஸ் சேவையில் 3276 பதவி வெற்றிடங்கள் ; பொலிஸ் தலைமையகம்

பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01.

தொலைபேசி : +94-11-2421111 / +94-11-2327711-2-3
தொலைநகல் இலக்கங்கள் : +94-11-234553
மின்னஞ்சல் : telligp@police.lk
இணையத்தளம் :  www.police.lk/

 

பொலிஸ் சேவைகளில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

பொலிஸ் சேவையில் 3276 பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். 

அதன்படி பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் 521 வெற்றிடங்களும், பெண் பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் 52 வெற்றிடங்களும், பொலிஸ் சார்ஜென்ட் பதவிகளில் 1861 வெற்றிடங்களும், பெண் பொலிஸ் சார்ஜென்ட் பதவிகளில் 567 வெற்றிடங்களும், பொலிஸ் சார்ஜென்ட் சாரதி பதவிகளில் 275 வெற்றிடங்களும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

தற்போது இருக்கின்ற அதிகாரிகளின் அளவுப்படி அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2015 டிசம்பர் 26ம் திகதி சேவை காலத்தை நிறைவு செய்த அதிகாரிகளிடமும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். 

பொலிஸ் சேவையில் அனைத்து பதவிகளிலும் நிரந்தர பதவி உயர்வு வழங்கும் நடைமுறை தயாரிக்கப்பட்டு அது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்காக பொலிஸ் மா அதிபரினால், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சிடம் வழங்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

A/L இல் மூன்று பாடத்தில் சித்தியா? முந்துங்கள்...

Read More