கருணா குழுவினரின் கடத்தல்களை அம்பலப்படுத்திய தாய் ; ஆணைக்குழுவில் முறையீடு

மேசன் வேலைக்குச் சென்ற எனது மகன் இன்றுவரை வீடு திரும்பி வரவில்லை என தாயார் ஒருவர் கண்ணீர் சிந்தியவாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிடுகையில்.

வடிவேல் சிவகுமார் என்ற 27 வயதான எனது மகன், கடந்த 2007.11.09 அன்று எமது வீட்டிலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்காகச் சென்றார். அவர் இன்றுவரை வீடு வந்து சேரவில்லை.

அவர் வேலைக்குச் சென்ற இடத்திலும், ஏனைய பகுதிகளிலும் தேடினோம் கிடைக்க வில்லை, அப்போது ஆரையம்பதியில் கருணா அம்மானின் தலைமையிலான குழுவினர், முகாமிட்டிருந்தர்கள். அவர்கள்தான் எனது மகனைப் பிடித்துள்ளார்கள்.

கருணா அம்மான் குழுவிடம் சென்றும் விசாரித்தோம் கிடைக்கவில்லை. எனக்கு 5 பெண் பிள்ளைகள் ஒரே ஒரு ஆண்பிள்ளைதான் அவரையும் கடத்தி விட்டார்கள் தற்போது எனது பெண்பிள்ளைகளோடு பல இன்னல்களை எதிர்கொண்ட வண்ணம் வாழ்ந்து வருகின்றோம்.

எனது மகன் தொடர்பில் ஐ.சி,ஆர்.சி, பொலிசாரிடமும் முறையிட்டோம் இதுவரையில் எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை. எனது ஒரே ஒரு ஆண்பிள்ளையை எங்கிருந்தாலும் மீட்டுத்தாருங்கள் என கண்ணீர் மல்க வடிவேல் மகேஸ்வரி என்ற தாய் முறைப்பாடு தெரிவித்தார்.

கல்லடி பாலத்தில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி !

Read More