முகவரி இல்லாதவர்களின் உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கெதிராக கண்டனம்

அண்மைக்காலமாக சில இணையத்தளங்களில் என்னைப்பற்றி அவதூறாக உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்கள் பிரதிநிதி ஒருவரால் பிரசுரிக்கப்படுவதை இட்டு மிகவும் வேதனை அடைகின்றேன்
 
இந்தச் செய்தியை முற்றாக மறுப்பதோடு எனது கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன். 
மேற்படி செய்தி தொடர்பானது ஒரு குறிப்பிட்ட ஒருவருடைய அரசியல் தேவைக்காக தேசியத்தையும் அதன் பண்புகளையும் நசுக்குகின்ற எண்ணத்தோடு இலங்கைத் தமிழரசுக்கட்சியையும், இலங்கைத் தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் மட்டக்களப்பில் பலவீனப்படுத்தி அதைச் சிதைப்பதற்கான முயற்சியாகவே இது அமைந்திருக்கிறது. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் இ.த.கட்சியின் முடிவுக்கிணங்க கட்சியை வெல்ல வைப்பதற்காக தொகுதிக்கிளை உறுப்பினர்களுடனும், இளைஞர் அணியுடனும் இணைந்து பல இடங்களில் பிரச்சார பணிகளையும், கருத்தரங்குகளையும்  ஒழுங்கு பண்ணி நடாத்தியிருந்தேன். இதை யாவரும் அறிந்ததே இந்நிலையில் நான் கட்சிக்கோட்பாட்டை மீறி செயற்பட்டதாக எனக்கெதிராக எப்போதும் பொய்க்கருத்துக்களை கூறிவரும் மக்கள் பிரதிநி நான் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான நு.Pசு.டு.கு கட்சியில் போட்டியிட்ட வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ததாக உண்மைக்கு புறம்பான செய்திகளை கட்டவிழ்த்துள்ளார். 
எனது தந்தை சந்தியூரான் க.கிருஸ்ணப்பிள்ளை இ.த.கட்சிக்காக பாடுபட்ட பாடுபட்டு கொண்டிருக்கின்ற மூத்த உறுப்பினர் இதனால் பலமுறை சிறை சென்று மீண்டவர் இந்நிலையில் நானும் எனது குடும்பமும் கட்சிக்கோட்பாட்டை மீறி செயற்படுவது என்பது மிகவும் நகைப்புக்குரியது.. என்றும் தேசியத்தையும் மண்ணையும் நேசிக்கின்றவர்களை ஒரு சிலரின் அரசியல் தேவைக்காக ஏமாற்ற முயற்சிப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. 
குறிப்பாக தமிழ் தேசிய விடுதலைப்பயணத்தில் தியாகத்தையும் நன்மதிப்பையும் கொண்டு எனக்கிருந்த அரசியல் ஈடுபாட்டை உற்றுநோக்கி கட்சித்தலைமை கடந்த 2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னை இளம் வேட்பாளராக போட்டியிட வைத்தது. இதில் போட்டியிட்டு கணிசமான வாக்கினைப் பெற்று கட்சியின் வளர்ச்சிக்கு இயன்றளவு பங்களிப்பை வழங்கியிருந்தேன். இந்நிலையில் கல்குடா தொகுதியில் அதிகளவு விருப்பு வாக்கையும் பெற்றிருந்தேன். அந்த உறுப்பினர் பதவி கிடைக்காவிட்டாலும் கட்சியில் இருந்து விலகிச்செல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகருதி இளைஞர்களை கட்சியோடு இணைக்கும் முகமாக இ.த.அ.கட்சி இளைஞர் அணியினை பல சிரமத்துக்கு மத்தியில் மாவட்ட இளைஞர்களின் உதவியுடன் அமைத்து இன்றுவரை அதன் தலைவராக செயற்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ளமுடியாத சிலர் என்னையும் எனது குடும்பத்தையும் பிற்போக்கு சிந்தனையுடன் விமர்சிப்பது அவர்களது அறியாமை. 
சந்தரப்பவசத்தால் தமிழ் தேசிய அரசியலில் சிலர் நுழையலாம் தேசியத்துக்காக அனைத்தையும் இழந்து இன்னும் பற்றுதியோடு செயற்படும் என்னை போன்றவர்களை விமர்சிப்பதற்கு முன் தாங்கள் தங்களது கடந்த காலங்களை சற்று திரும்பிப்பார்த்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். 
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் முன்வந்து செயற்படுகின்ற இளைஞர்கள் இதுபோன்றவர்களின் சொந்த வாழ்க்கைக்கு துணைபோகாவிட்டால் துரோகி என்றும் தங்களுக்கு இருக்கின்ற செல்வாக்கினை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுவதும் மிகவும் வருந்ததக்கது. 
நாகரீகமற்ற முறையில் நான் என்றும் அரசியலில் ஈடுபடவில்லை ஈடுபடவும் மாட்டேன் காலத்தின் தேவைகருதி உண்மைகளை மக்களுக்கு கூற பின் நிற்கமாட்டேன் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். இவ்வாறு முகவரி இல்லாமல் செயற்பட மாட்டேன் . என்பதோடு சிலரது அரசியல் தேவைக்காக தேசியத்தையும் மக்களது அபிலாசைகளையும் குழிதோண்டி புதைக்கும் செயற்பாட்டினை செய்யவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்வதோடு எனக்கெதிராக செய்தியை வெளியிட்டு வருபவருவக்காவும், கல்குடா தொகுதியைசேர்ந்த ஓருசில விசமிகளின் அவதூறான பிரச்சாரத்திற்காவும், எனது அரசியல் பயணத்தை ஒதுக்கிக்கௌ;ளமாட்டேன் என்பதை எனது ஆதரவாளர்களும் தேசியத்தில் பற்றுறுதி கொண்ட மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வண்ணம்
உண்மையுள்ள
கி.சேயோன்

கிழக்கு ஊடகவியலாளர்கள் குறித்து ஊடக அமைச்சு கவனம் செலுத்தவேண்டும்

Read More