வீடுகள், கடைகள் மீது ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்கள் மிலேச்சத்தனமாக தாக்கி பள்ளிவாசலுக்குள்ளும்

ஹிஸ்புல்லாஹ் இற்கு தேசிய பட்டியல் அறிவிப்பை தொடர்ந்து காத்தான்குடியில் SLMC ஆதரவாளர்கள் மீது தாக்குதல் – பாதுக்காப்பை பலப்படுத்துமாறு பாதுக்காப்பு தரப்பு மற்றும் பொலிசாருக்கு அலி சாகிர் மௌலானா MP . அறிவுறுத்தல் – தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன் பெயர் அக்கட்சியின் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டதை அடுத்து அவரின் ஆதரவாளர்களால் காத்தான்குடியில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் மீதும் , அவர்களின் வியாபார நிலையங்கள் , வீடுகள் மற்றும் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து துரிதமாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் பாதுகாப்பு தரப்பு , பொலிஸ் அதிகாரிகள் , தேர்தல் செயலக அதிகாரிகள் , தேர்தல் கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு விடயத்தை தெளிவு படுத்தியதை தொடர்ந்து தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பதட்ட நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது –

இன்று மாலை ஊடகங்கள் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியுற்ற சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பெயரும் அறிவிக்கப்பட்டது-

இதனால் காத்தான்குடியில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என்ற தோரணையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மீதும் அவர்களின் வீடுகள். வியாபார நிலையங்கள் மீது ஜனநாயகத்துக்கு முரணான  

முறையில் மிலேச்சத் தனமான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டிருந்ததுடன் பள்ளிவாசல் ஒன்றுக்குள்ளும் பட்டாசுகளை கொளுத்தி போட்டதுடன் அங்கு இருந்தவர்கள் மீது தாக்குதலும் மேட்கொண்டுள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதுக்காப்பை பலப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் குண்டர்களின் தாக்குதலில் காயமுற்ற பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன 

குறித்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேட்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் குறித்த சம்பவத்திற்கு எதிராக தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்

உலகில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ; உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Read More