மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 ஆசனங்களில்  ஞா. சிறிநேசன் 48,221 வாக்ககளும்,  எஸ்.எஸ். அமல் 39,321 வாக்குகளும்,  சீ. யோகேஸ்வரன் 34,039 வாக்குகளும் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்ற பெற்றுள்ளது.

 

இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற ஒரு ஆசனத்தில் அலிசாகிர் மௌலானா 16,611 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற ஒரு ஆசனத்தில் எம்.எஸ்.எம். அமீர் அலி 16,386 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட இரா. துரைரத்தினம் 32,450 வாக்குகளைப் பெற்று 1589 வாக்குகள் வித்தியாசத்தில் சீ. யோகேஸ்வரன் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டு உணவகங்களில் சோதனை ; உண்ணத் தகாத உணவுப் பொருட்கள் மீட்பு

Read More