எமக்கு அதிக விருப்பு வாக்குகளை அளித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் - ஸ்ரீநேசன்

வன்மையற்ற தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்ததனால் தமக்க அதிக விருப்பு வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர்.தேர்தல் மூலம் மக்கள் அடக்குமுறை ஒடுக்குமுறை அடிபணிய வைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு மக்கள் பெரும் பாடம் புகட்டியிருக்கிறார்கள். முற்போக்கான அரசியலுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்

 

எமக்கு மக்கள் 48598 வாக்குகளை சுதந்திரமான முறையில் அளித்து தங்கள் விருப்புக்குரியவர்களை தெரிவு செய்திருக்கிறார்கள் அந்த மக்களுக்கும் எம்முடன் தோளோடு தோள் நின்று உழைத்து சகல ஊடகங்களிலும் எம்மை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

 

அத்தோடு ஜனநாயகத்தை நிலைநாட்ட  சகல வழிகளிலும் உதவியளித்த நல் உள்ளங்களுக்கும் வருகின்ற 5 வருட காலத்தில் சுமக்க வேண்டிய பாரத்தை நிதானமாக திட்டமிட்டு சுமப்பேன் நல்லாட்சியில் வன்மையற்ற ஒரு தேர்தல் இடம்பெற்றதனால் எமக்கு அதிக விருப்பு வாக்குகளை அளித்த மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் தனது வெற்றி பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்
என ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவி ஓவியப் போட்டியில் தேசிய விருது பெற்று சாதனை

Read More