சவுதியில் மூன்று இலங்கையர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

சவூதி அரேபியாவில் திங்கட்கிழமை மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உட்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்து கொள்ளையடித்த குற்றத்துக்காகவே இலங்கையர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வீடு ஒன்றை உடைத்து நுழைந்த இவர்கள், அங்கிருந்தவரைத் தலையில் அடித்துக் கொலை செய்ததுடன், அங்கிருந்த பணத்தைக் கொள்ளையிட்டதாகவும், சவூதி அரேபிய உட்துறை அமைச்சு தெரிவித்துள்ள்ளது.

இவர்கள் மூவருக்கும், செங்கடல் நகரான ஜெட்டாவில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

லண்டனில் சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தினரின் ஒளி விழா ; அனைவரும் வருக

Read More